பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 169


கலிதீர்க்கும் தெய்வமே! இதோ வாரேண்டா! இனிமேல் நீ அழவேண்டியது இல்லடா... இல்லடா!’

அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து, அவள் படுவேகமாக நடந்தாள். உச்சி வெயில் அவளுக்கு உறைக்க வில்லை. கொட்டிய தார் ரோடு, அந்த செருப்பில்லாக் கால்களைச் சுடவில்லை.

ஒதுங்கிய இடத்தில் ஒய்யாரமாக இருந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் அவள் மூச்சு விட்டாள். வந்த வேகத்தில் ஜன்னலைப் பார்த்தாள். என் பையன் எங்கே? எங்கே? அது பூட்டிக் கிடந்தது. கதவைப் பார்த்தாள். பெரிய பித்தளைப் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. இரும்புக் கேட்டைத் திறக்கப் போனாள். அது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது.

'என்ன இதெல்லாம்? எங்கே போய்விட்டார்கள்? ஒருவேளை என் பிள்ளைக்கு சந்திரமதியின் லோகிதாசன் போல்.’

இதயத்தைப் பிடித்துக்கொண்டவள் போல், அவள் சற்று குவிந்து முழங்கை முன் மார்பில் பட்டபோது 'கம்பவுண்டர் மணி வருவது கண்ணில் பட்டது. தன்னை நோக்கி வந்தவனை நோக்கி அவள் ஓடினாள்.

“என் பையன் எங்கே?”

“எப்போ வந்தீங்க?”

“என் பையன் எங்கே?”

"“சொல்றேம்மா. பெரிய கதையே நடந்துட்டு.”

"என் பையன் கதையச் சொல்லுங்க."

"பையன் நல்லாத்தான் இருக்கான், ஒங்கள நினைச்சி இங்க அழுதது எனக்கு அங்கே கேட்கும். சதா அம்மாங்க தான்; மற்றபடி நல்லாத்தான் இருக்கான்."