பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 171


“வசந்தியையா?”

“ஆ...ஆமாம். இந்நேரம் கல்யாணம் முடிஞ்சிருக்கும்.”

மணிமேகலைக்கு தலை சுழன்றதோ இல்லையோ, எதிரே இருந்த எல்லாப் பொருட்களும் சுழல்வது போலிருந்தன. எங்கே இருக்கிறோம் என்ற இடமோ, என்ன பேசினோம் என்ற பொருளோ, என்ன விளைவு என்ற ஏவலோ-எதுவும் புரியாமல் அதே சமயம் எல்லாம் புரிந்ததுபோல் தோன்றியது. மாவிலைத் தோரணப் பந்தலில் ஐயர் மறையோத கொட்டு மேளம் கொட்ட அப்பா அகம் மகிழ்ந்து நிற்க ஜெயராஜ் அவள் கையைப் பிடிக்கிறான். விடமாட்டேன் என்பதுபோல் பிடிக்கிறான். பிடிக்குள்ளேயே அடிவிரலால் அவள் கையை அழுத்து கிறான். மங்களப் பெண்கள் குலவையிடுகிறார்கள். தங்கம்மா பாட்டி ‘என் தங்கமே’ என்கிறாள். “ராம-சீதா கல்யாணத்தை பார்க்க முடியலியே என்ற குறை இன்னையோட தீர்ந்து போச்சு” என்கிறான் ‘கூத்து’ கோவிந்தன்.

இதோ இப்போதான் நடக்குது. இங்கேயே நடக்குது. அதோ மேளச் சத்தம். அதோ அப்பா. இதோ ஒரு மஞ்சள் கயிறு. என் பக்கத்திலேயே அவரு கையை அவர் பிடிக்க கமல முகம் நாண் சிவக்க இதோ இப்போதான் அம்மி மிதித்துவிட்டு மணப்பந்தலைச் சற்றி வருகிறோம்.

இது எப்படி இதுக்குள்ள முடிந்தது? ராவணன் பிறந்ததை தூங்கி எழுந்த உடனேயே கேள்விப்பட்ட பிரம்மா, பல் தேய்க்கும்போது, பத்துத்தலை ராவணன், இறந்ததுபோல ஆயிட்டே... காலக் கோளாறு, காலத்தை நெருக்குமோ? காலத்தின் முன்னால் போனதெல்லாம் கண்முன்னால் வந்து மறுபிறவி எடுக்குமோ?

கால மயக்கத்தில் கடந்த காலமும், நிகழ்காலமும் இரண்டறக் கலக்க எது துவக்கம், எது முடிவு என்பதை