பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


அறியமாட்டாது அவள் மயங்கினாள். பிறகு மயக்கம் தெளிந்தவள்போல் மங்கிய பார்வை மாமூலுக்கு வந்தவள் போல் அவள் எதிரே நின்றவனைப் பார்த்தபோது, அவன் காபி டம்ளரை நீட்டிக்கொண்டு நின்றான். எப்படி ‘காபி’ வந்தது? எங்கிருந்து வந்தது?

மணிமேகலை, சுயமேகலை ஆனாள். எதிர்பார்த்திருந்த ஒன்று எப்படியோ நடக்கும் என்று நினைத்தது, இப்படி நடக்கும் என்று அவள் நினைக்கவில்லை. அவள் தன் தங்கத்தாலியை சுண்டிப் பிடித்தாள். அது பாம்பு மாதிரி அவளைப் பற்றியது.

“சரி. எங்கம்மா தங்குறது?”

“என்ன சொன்னிங்க?”

“வெயிலாய் இருக்கு வீதியில நின்னா எப்படி?”

“இதுதானே நான் இருக்க வேண்டிய இடம்.”

“அத அப்புறமா யோசிக்கலாம். இப்போ என் ரூமுக்கு வேணுமுன்னால் போவோமா?”

மணி லேசாக அவள் கையைத் தொட்டான். அவளும் சுரனை இல்லாதவள்போல் அவன் கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டே எழுந்தவள், பிறகு அந்தக் கரத்தை உதறிவிட்டுக் கொண்டே நடந்தாள்.

மணி தன் அறையைத் திறந்தான். நல்ல வெயில் சமயம் என்பதால் யாரும் பார்க்கவில்லை. மணிமேகலை அங்கே வந்து கீழே உட்கார்ந்து, கட்டிலின் விளிம்பில் இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு முதுகை கட்டில் சட்டத்தில் சாத்திக்கொண்டு தலையை அங்குமிங்குமாக ஆட்டினாள்.

மணி கதவைச் சாத்தப் போனான். அவள் ஒரளவு சுய பிரக்ஞை பெற்றவளாய் அவனை வினாவுடன்