பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


என் பிள்ள இப்போ கொஞ்சம் என்னை மறந்திருப்பான். அவங்க வாரது வரைக்குமகாத்திருந்து அவன் கண்ணில் என் முகத்தைக் காட்டி, அப்புறம் அதை மறக்கதுக்காக அவன் ஒரு மாசம் அழக்கூடாது. என் பிள்ள அழவே கூடாது.”

மணிமேகலை நிமிர்ந்து நின்றாள். ஓராண்டு கால பிரச்னைக்கும் ஒருகண தீர்மானம் தீர்வாகி விடுவது போல், அவள் இப்போது தன் நோக்கையும், போக்கையும் தீர்மானித்துக் கொண்டாள்.

“மணி! மெட்ராஸ்ல ஏதோ ஒங்களுக்கு ஒரு அனாதை விடுதி இருக்கதாச் சொல்லுவிங்களே பேரு என்ன?”

“மணிமேகலை விடுதி!

“நல்ல பொருத்தந்தான். என்னை, இப்பவே உங்களால கொண்டுவிட முடியுமா?”

“ஆர அமர யோசிக்கலாம். இன்றையப் பொழுத இங்கேயே கழியுங்க. நாளைக்கு அந்த ஸ்கவுண்ட்ரல்ஸ் வந்துடுவாங்க. அப்புறமாய் யோசிப்போம். நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யத் தயார். ஆனால் இன்னைக்கி வேண்டாம். நான் வேணுமானால் வெளில படுத்துக்கிறேன்.

“அய்யோ மணி. நான் அதுக்காவச் சொல்லல. உங்களச் சந்தேகப்பட்டால் என் நெஞ்சுல புத்து வரும். தப்பாப் பேசுனால் வாய் அழுகிடும். நான் அதுக்காகச் சொல்லல. என்னால இங்க இருக்க முடியாது. நாளைக்கி அவங்கள பார்த்தால் ஒருவேள கொலைகூட பண்ணுனாலும் பண்ணிடுவேன். நான் இப்போ எங்கேயாவது போயாகணும். உங்களால அந்த விடுதியில் என்னை சேர்க்க முடியுமோ முடியாதோ, நீங்க வந்தாலும்,