பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 175


வராட்டாலும் நான் போய் விடுதி விடுதியா தட்டப் போறேன்.”

“சரி உங்க இஷ்டம்.”

“உம்; சீக்கிரமா புறப்படுங்க.”

மணி தலையை வாரிக் கொண்டான். அவன் வாரி முடியவில்லை. இருந்தபடியே எழுந்தாள். சூட்கேஸை எடுத்துக் கொண்டாள். இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசாமல் நடந்தார்கள். மணிமேகலை தன் முன்னாள் வீட்டுக்கு முன்வந்ததும் விம்மினாள். அந்த அறை, அவருடன் உறவு கொண்ட அறை, அதோ அந்த இடத்தில் தான் லேடி டாக்டர் பெர்க்னன்ஸி டெஸ்ட் நடத்தினார். அதோ அந்தப் படியைப் பிடித்துதான் என் பிள்ள முதன் முதலாய் எழுந்தான். உடனே நான் ‘பாருங்க. பாருங்க. பயலைப் பாருங்க’ என்று கத்தினேன். எல்லோரும் வந்து பார்த்தார்கள். என் பிள்ளய எடுத்து உச்சி மோந்தார்கள்.

அவள் சிறிது நடந்து நடக்க மனமில்லாமல் திரும்பி வந்து வீட்டின் முன்னால் வந்து நின்றாள். இந்த சின்ன அறையில்தான் என்னை நானே ஒதுக்கிக் கொண்டேன். அந்தப் பெரிய படிக்கட்டில் நின்றுதான் அவர் எனக்கு கையுரை கொடுத்தார். அந்த தளத்துல நின்னுதான், வசந்தா அந்தப் பாவியோட கொஞ்சுனாள். இதோ இப்போ நிக்கனே... இதே இடத்துலதான் அந்தக் கார் நின்னுது. இதுல நின்னுதான் வசந்தியும், மிஸ்டர் ஜெயராஜும் நெருங்கி உட்கார்ந்திருக்க, கார் புறப்பட்டது.

மணிமேகலையும் புறப்பட்டாள். இனிமேல் இப்போதைக்கு இங்கே வேலையில்லை. தோன்றிய வேகத்தில் நடந்தாள். தெரிந்த இடமெல்லாம் வழியாக, தெரியாத ஒன்றை நோக்கி அவள் வேகவேகமாக