பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


“ஊருக்குப் போயிட்டு நாளைக்கு வரலாமா ?”

“அங்கேயும் ஒங்க வீடு பூட்டித்தானே இருக்கு.”

மணிமேகலை எதுவும் பேசாமல் கீழே வைத்திருந்த சூட்கேஸை எடுத்தாள். ‘போலாமா’ என்றாள். கிட்டே வந்த டாக்ஸிக்காரர்களை கடந்து எதிரே வந்த ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி பழைய பஞ்சாங்கம் மாதிரி இருந்த எதோ ஒரு லாட்ஜுக்குப் போனார்கள். லாட்ஜ் பையன்களுக்கு மணியைத் தெரியும் போலுக்கு! கண் சிமிட்டிச் சிரித்தார்கள். அவளுக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை. ‘ரூம் பாய்’ ஒரு அறையைத் திறந்து கொடுத்தான்.

கட்டிலில் வந்து உட்கார்ந்த மணிமேகலை சூட் கேஸைத் திறந்தாள். அங்கே துணிகளுக்கு அடியில் இருந்த பாமாவின் கடிதங்களை எடுத்து குவியலாக்கிக் கொண்டு “ஓங்ககிட்ட வத்திப்பெட்டி இருக்கா?” என்றாள். மணி, உரிமையோடு அருகில் வந்து அவள் கையைப் பற்றி ஒரு கடிதத்தை பிடுங்கிப் படித்தான். படித்துவிட்டு, “அடடே இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிறமாதிரி இருந்த இந்த பாமாவா இப்படி எழுதியிருக்காள்? ‘ஒங்கள கன்னத்தில் முத்தமிடத் துடிக்கிறேன்’. பரவாயில்லியே... முத்தங் கொடுக்கிற அளவுக்குப் போயிட்டாளா? முத்தம் நல்லாதான் இருக்கும், இல்லியா? இதுல தப்பில்ல. செக்ஸ் ஒரு பயாலஜிகல் நீட்... அதை எப்படி வேணுமுன்னாலும் நிறைவேற்றலாம்!”

இந்த மணியின் பேச்சு, ஒரு மாதிரியாகத் தெரிந்தது. அரக்கோணத்தில் ஒரு மணியும், இங்கே இன்னொரு மணியும் இருப்பதுபோல் அவளுக்குத் தெரிந்தது. இங்கே இருக்கும் மணியே, நிஜமான மணி. அவள் சென்ட்ரலில் ரயிலைவிட்டு இறங்கியதும் அவள் முதுகைத் தட்டி ‘புறப்படலாமா’ என்று சொன்னதும் கடற்கரையில் விடுதி தேட அவன் தயங்கியதும், இப்போது அவள்வாழ்க்கை