பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ♦ 179


யில் எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல், பாதி அட்டகாசமாகவும் மீதி வேடிக்கையாகவும் பேசுவதும் அவளுக்கு திட்டமிட்ட சதிச் செயல்களாகத தெரிந்தன. என்றாலும் கலவரத்தைக் காட்டிக்கொள்ளாமல் அவன் கையில் இருந்த காகிதத்தை வெடுக்கெனப் பிடுங்கி காகிதக் குவியலோடு சேர்த்து அந்தக் குவியலை சுக்கு நூறாக்கி பாத்ரூமிற்குள் கொண்டுபோய் போட்டாள்.

மணி சற்றுக் கோபத்தோடு பேசினான்.

"என்ன இது? ஒவ்வொரு லட்டரும் ஒரு லட்சம் தாளுமே. நமக்கு நாளைக்கு உதவக்கூடிய காகிதங்களை இப்படியா பண்றது? பாமாவை ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி வச்சிருக்கலாமே. சரி போனால் போவட்டும். படுக்கலாமா? லைட்ட ஆப் பண்ணட்டுமா? ரூம்பாய் ஒங்க சம்சாரமான்னு கேக்கான். நம்ம ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தம். ரிஜிஸ்டர்லகூட ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப்புன்னுதான் எழுதியிருக்கேன். என்ன பண்றது? நாட்ல நடக்கிற தப்புக்கு இந்தத் தப்பு பெரிசில்ல. ஒரு தப்பில் இன்னொரு தப்பு பிறக்குது. இந்தப் புடவ ஒனக்கு ரொம்ப அழகாய் இருக்கு"

மணிமேகலை திடுக்கிட்டாள். அட கடவுளே...

‘இவன் ஒரு ஜென்டில்மேன் அயோக்கியன்.’ இனிய சுபாவம் இவனுக்கு ஒரு கபட நாடகம். அபலைப் பெண்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அந்தச் சிரமங்களால் தானும் சிரமப்படுவதுபோல் அவர்களை நம்ப வைத்து, அவற்றிற்குப் பரிகாரங்களையும் கொடுத்துக் கொண்டே, அவர்களின் கற்பை எடுப்பது தெரியாமலேயே எடுப்பவன். இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான யோக்கியர்களால்தான், பெரும்பாலான பெண்கள் கெட்டுப் போகிறார்கள். அவர்களே கெட்டுப் போகும்படி செய்யும் இந்த ‘ஒயிட் காலர்’ வித்தைக்காரர்கள்,