பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


எப்போ நடக்கத் துணிஞ்சேனோ அப்பவே, எந்த ஆணையும் துரசாய் நினைக்க, தேவையானால் துடைப்பத்த வைத்து அடிக்கவும் துணிந்துதான் வந்தேன். மணி தயவுசெய்து ஒங்க சொந்த தங்கையையும் இப்படி..”

மேற்கொண்டு தொடர்ந்து முடிக்கத் தெரிந்த வார்த்தைகளை முடிக்காமலே, குமுறிக்கொண்டே அவள் நடந்தாள். மணி யோசித்தான். இந்த இருட்டில் இந்தத் தனிவழியில் எப்படிப் போவாள்? போகலாமா? வேண்டாம். அயோக்கியன் செய்கிற அப்பட்டமான நன்மைகூட தீமையில் விட்டாலும் விட்டுடலாம்.

எங்கே போவது, எப்படிப் போவது என்பது தெரியாமலே தன் பாட்டுக்கு கால்போன போக்கில் நடந்தாள். அவளைப் பார்த்து முறைத்த கண்கள்கூட, அந்தத் தோரணையில் தோல்வி கண்டு துவண்டன. ‘உயர்தரமான’ சிகரெட்டுகளை புகைத்துக்கொண்டே அவளுடன் சைடில் நடந்த பூட்ஸ் கால்கள், பெல்பாட் டம்கள், கிருதாக்கள் முதலிய எல்லாம் மேற்கொண்டு நடக்காமல், நடந்த வழியை, கடந்தால் கடைக்காரர்களும், மற்றவர்களும் தப்பாக நினைப்பார்களே என்று தயங்கி, நின்ற இடத்திலே நின்றபோது...

மணிமேகலை அங்கே வந்த பஸ்ஸில் அதன் போர்டை பார்க்காமலே ஏறினாள். அது அவளுக்குத் தெரிந்த பாரிமுனையில் விட்டது. மணி ஒன்பது, என்ன செய்யலாம்? எனக்கா இந்த கதி? எனக்கா? அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

பஸ் கவுண்டர் அருகே குப்புறப் படுத்துத் துங்கும் சிறுவர்கள். மரக்கட்டையை தலையணையாய் வைத்து, இன்னொரு மரக்கட்டைபோல் தூங்கும் ஒரு வயதுப் பெண். கரியடுப்பில் ஒரு பானை பொங்க, பொங்கியதை