பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 ★ இல்லம்தோறும் இதயங்கள்


தைக்கலியா? அரிச்சந்திரன் மயானம் காக்கலியா? உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் கார்க்கி தெரியுமா? அவரு ஒரு தோட்ட வேலைக்காரர். ஊர் புகழும் கூத்து கோவிந்தன் தெரியுமா? அவரும் ஒரு சாதாரண ஏழை. அதுவும் உதை வாங்கப் போன எளியவன்!”

'கூத்து' கோவிந்தன் லேசாகச் சிரித்தான். பிறகு அவன் மெளனமாக முன்னால் நடக்க அவள் பின்னால் நடந்தாள். இருவரும் அந்த சினிமா நடிகர் வீட்டுக்குப் போனார்கள், கோவிந்தன் செருப்பை வீட்டுக்கு வெளியேயே போட்டுவிட்டு சுருட்டிய 'ஆப் கையை' புல் கையாக்கி பாய்ஸ் கம்பெனியில் 'தடிமாடே! எருமை மாடே! இடியட் மாடே!' என்று தான் கூப்பிட்ட தன் முன்னாள் பவளக்கொடியான நடிகர் வெண்சாமரத்தின் வீட்டுக்கு முன்னால் "அண்ணே ! அண்ணே !” என்று சொல்லிக்கொண்டே போனான். 'அண்ணனின்' காரிய தரிசி அவனுடன் பேசினான். வேலைக்காரி அண்ணனுக்கில்லியாம், காரியதரிசிக்கித்தானாம். இந்த அவுட் ஹவுஸ்லயேதானாம்.

வெளியே ஒதுங்கி நின்ற மணிமேகலைஉள்ளே 'ஆஜர்' செய்யப்பட்டாள். காரியதரிசி கண்ணை மூடிக்கொண்டே பேசினார்.

"மாசம் இருபது ரூபாய் சம்பளம். மூணு வேள சாப்பாடு. குழந்தைகளை ஸ்கூல்ல விடணும். சமைக்கணும். பாத்திரம் தேய்க்கணும். அவள் ஹிஸ்டிரியா பேஷண்ட். அனுசரித்துப் போகணும். ஒருவார 'காய'மில்லாத வேலை அப்புறந்தான் 'காயம்'. சரியான்னு கேட்டுச் சொல்லுப்பா...?”

மணிமேகலை சரியென்று சொல்லாமலே "இப்போ தேய்க்கிறதுக்கு பாத்திரம் இருக்கா?" என்றாள் அவனைப் பார்த்து.