பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 191


மணிமேகலை சூட்கேஸை வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு அவுட்ஹவுஸிற்குள் போனாள். அது நல்லாத்தான் இருந்தது. இரண்டு அறைகள். நல்ல கட்டில். ஸோபா ஸெட்டும் இருந்தது. காரியதரிசியின் மனைவி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

"ஒரு வேலைக்காரிகூட இங்க ஒழுங்கா இருக்கல. கோபத்துல செம்பைத் துக்கி எறியுறதுதான். இதுக்காவ கோபப்பட்டு போயிடுறதா? அந்த சமயத்துல வடை பாயசம் கொடுத்ததை நினைத்துப் பார்க்காண்டாமா? பார்க்காண்டாமா? நீங்க சொல்லுங்கோ ?”

மணிமேகலை சிரித்துக்கொண்டே பதிலளித்தாள்.

"என் மேல எதை வேணுமுன்னாலும் எறியுங்க..! ஆனால் என்னை மட்டும் எறிஞ்சிடாதிங்க!”

காரியதரிசியின் மனைவி முதலில் அவளைக் கண்டிப்புடன் பார்த்துவிட்டு, பிறகு அவள் சொன்னதன் பொருள் விளங்கியவளாய் லேட்டாகச் சிரித்தாள்.

"அப்ப நான். சே.சே இப்பவே சேலத்துக்குப் போகணும்." என்றான் கோவிந்தன்.

மணிமேகலை அவனுடன் வீட்டுக்கு வெளியே வந்தாள். கோவிந்தன் புலம்பினான். கைகள் கண்கள் பக்கம் போய் பிறகு கைக்குட்டையைத் தேட தாளாது பேசினான்.

"சந்திரமதி மாதுரி ஆயிட்டியேம்மா. இந்த சந்திர மதிக்கா இப்படி வரணும்?" மணிமேகலையின் கண்களும் இப்போது கலங்கின.

"நான் சந்திரமதி இல்லண்ணே. ஏன்னு கேக்குறியா?

சந்திரமதியோட கழுத்தில் இருந்த தாலி அவள் புருஷனுக்கு மட்டும் தெரியுமாம், மற்றவங்களுக்குத்