பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 193


பகுதியில் 'மைன்ட் இஸ் ஹெல் ஆப் ஹெவன் அண்ட் ஹெவன் ஆப் ஹெல்' என்று படித்தது அவளுக்கு பக்கம் திறந்த பழைய புத்தகம்போல், கண்முன் தோன்றியது.

வந்த இரண்டு நாளைக்கு வளைந்து வளைந்து வேலை பார்ப்பது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. பாத்திரத் தேய்ப்பு, பக்குவச் சமையல், கடைக்குப் போவது முதலிய கணக்கில்லா வேலைகள்! மூன்றாவது நாள் சுவர்க் கடிகாரம் ஐந்து தடவை கத்தினாலும் அவளால் எழும்ப நினைத்தும் எழும்ப முடியவில்லை. பாயில் புரண்டு கொண்டிருந்தாள். திடீரென்று தலையிலும் காதுகளிலும் ஜில்லிட்ட தண்ணீரால் சிலிர்த்து எழுந்தாள். காமாட்சி, அவள் தலையில் 'தண்ணீர் அபிஷேகம்' செய்துவிட்டு காலியாக இருந்த செம்பை வைத்துக்கொண்டு காளிபோல் கத்தினாள்.

"ஒன் மனசில் என்னடி நினைக்கிறே? பொறுப்பிருந்தா இப்டி தூங்குவியாடி ? ஒன்பது மணிக்கெல்லாம் கோவிலுக்குப் போகணுமுன்னேன். இப்படித்துங்குனால் போக முடியுமாடி ? இன்னுமாடி இருக்கிற ? ஒங்களெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். அவரு இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு வாரார். ஷுட்டிங் போயிட்டு, நாலு நாளாய் நாயாய் சுத்திட்டு வருவாரு, அவருக்கு உருளைக்கிழங்குன்னா உயிரு. மார்க்கெட்டுக்குப் போகணும். இப்படியாடி தூங்குறது? தூக்கம் பிடிச்ச மூதேவி! எனக்கு ராத்திரி முழுசும் வராத தூக்கம் ஒனக்கு எப்படிடீ வரும்? எப்படி.டீ வரும்?"

முதலில் அதிர்ச்சியுற்ற மணிமேகலை பிறகு ஒரு தீர்மானத்தோடு எழுந்தாள். உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு உலக்கை அடிக்குப் பயப்படுவதில் நியாயமில்லை. பியூஸிக்கு மேலேயே படிததிருக்கேன். பி.ஏ. முதலாவது ஆண்டு. எப்படியாவது ஒரு கம்பெனில