பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 ★ இல்லம்தோறும் இதயங்கள்


கிளார்க்கா போகணும். டைப்ரைட்டிங் எப்படியாவது கத்துக்கணும். என் பிள்ளையை எப்படியாவது கொண்டு வந்துடனும். எப்படிக் கொண்டு வாரது? எப்படியோ அவனைக் கொண்டு வரமுடியும்.

வீட்டு வேலைகளைக் கவனித்துவிட்டு ஏழு மணிக் கெல்லாம் அவள் சற்று நிமிர்ந்தபோது "சீக்கிரண்டி சீக்கிரண்டி. மார்க்கெட்ல நல்ல உருளைக்கிழங்கு வித்துடும். அழுகுனதுதான் இருக்கும். சீக்கிரமாப் போடி, சீக்கிரம். என்னடி எருமைமாதிரி நடக்குற" என்றாள். அருகிலேயே இருந்த பாலசுப்பிரமணியர் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பியபிறகு மணிமேகலையின் கைகளைப் பிடித்துக்கொண்டு "நான் ஒரு கிறுக்கிடி. வாய் இருக்கிற அளவுக்கு மனசு கிடையாதுடி. என்னைக் கை விட்டுடாதே! ஒன்னையே திட்டணுமுன்னால் நான் எவ்வளவு பெரிய பைத்தியமாய் இருப்பேன்" என்று அழுதாள். மாலையில் நட்சத்திர வீட்டு வேலைக்காரி, காரியதரிசியின் வேலைக்காரிக்கு உத்திரவுகள் இட்டுக் கொண்டிருந்தாள். தன்னை, அந்த நடிகரின் இடத்திலும் இவளை அந்தக் காரியதரிசியின் இடத்திலும் அவளாகவே நியமித்துக் கொண்டவள்.

"ஒன் பேரு என்ன, மணிமேகலையா? போவட்டும். இந்தா பாரும்மா இனிமேல் இந்த பூந்தொட்டிகளுக்கும், செடிகளுக்கும் நீதான் தண்ணி ஊத்தணும்!" என்று சொல்லிக்கொண்டு கையிலிருந்த ரப்பர் குழாயை நீட்டியபோது மணிமேகலை அதை வாங்கிக்கொள்ள கைகளை நீட்டப் போனபோது வந்தாள் காமாட்சி. மணிமேகலையைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு "இவள் கால் தூசிக்கு நீ பெருவியாடி? நீ எப்டிடி இவளுக்குச் சொல்றது? ஒன் ராங்கித்தனத்தை எங்க வச்சுக்கனுமோ அங்க வச்சுக்கோ. இவள் என் மகளவிட ஆயிரம் மடங்கு