பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 195


உயர்வானவா. நீயாடி என் பிள்ளைக்கு உத்திரவு போடுற? பூந்தொட்டிக்கு தண்ணி ஊத்துறதுனர்லேயே நீ குப்பத் தொட்டில்லன்னு ஆயிடுமாடி! நீயும் ஒன் தளுக்கும் ஒன் மினுக்கும்..” என்று கத்தியபோது சில வேலைக்காரச் சிறுவர்கள் அங்கே கூடாதது போல் ஒதுங்கி ஒதுங்கி நின்று கூடியபோது "பாருங்கடா இந்த மூதேவி பண்ற வேலையை. என்னோட மணிமேகலை இவள் செய்யுற வேலையைச் செய்யணுமாம். அறிவுகெட்ட மூதேவி. நீ இதைவிட என்னச் செய்யச் சொல்லலாமுடி’ என்று சொல்லிக் கொண்டே அந்த ரப்பர் குழாயை கீழே போட்டு அதை மிதிமிதியென்று மிதித்தாள். பிறகு, "இவளையா இப்டிப் பண்ற பரவாயில்ல. நானே நீ சொன்ன வேலையச் செய்யுறேன்” என்று குழாயை எடுத்து எதையோ பண்ணி விட்டு பிறகு கை வலித்ததால் மீண்டும் அதைக் கீழே போட்டு "நானாடி ஒனக்கு வேலைக்காரி? என்கிட்டயாடி வேலை வாங்குற?" என்று சொல்லி அதை அவளாக நினைத்து மிதித்தாள்.

இன்னொரு சமயத்தில் காரியதரிசி மணிமேகலையிடம் எதையோ பேசினார். பொதுப்படையான பேச்சு. ஆனால் அதை அவர் 'டயலாக்' மாதிரி பேசிவிட்டு பிறகு அதே பாணியில் "மணி கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து தரலாமா?” என்றார். அவள் டம்ளரை நீட்டியபோது அவரது கை தற்செயலாகப் பட்டதோ அல்லது டெஸ்ட்' செயலாகப் பட்டதோ தெரியவில்லை. அவர் போனதும், ஓணான் மாதிரி அவர்கள் பார்வைக்கு அகப்படாத இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காமாட்சி ஒரே ஒட்டமாக ஒடி வந்தாள். மணிமேகலையின் கையில் இருந்த டம்ளரை வாங்கி அவள்மீது வீசினாள். மணிமேகலை பிரமை பிடித்தவளாய் ஒதுங்காமல் நின்றபோது டம்ளர் ஒதுங்கிச் சுவர்க் கண்ணாடியை உடைத்தது. காமாட்சி குறிதவறிய கோபத்தில் குதித்துக் கொதித்தாள்.