பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18 * இல்லம்தோறும் இதயங்கள்


கம்பீரத்தால் பொடிப் பொடியாக்கிவிட்டு "என்னப்பா... நீங்க... சின்னப் பிள்ளை மாதிரி" என்று சொல்லிக் கொண்டே, தன் முந்தானையை எடுத்து அவர் கண்களைத் துடைத்துவிட்டாள். இந்தச் சமயத்தில், குழந்தையை எடுத்துக்கொண்டு வந்த சந்திரன், நிலைமையின் நெகிழ்வைப் புரிந்து கொண்டவன்போல், குழந்தையை அவரிடம் நீட்டினான். அழப்போன கிழவர் இப்போது சிரிக்கப் போனார்.

  இதற்குள், உள்ளே இருந்து மணிமேகலையின் மூத்த அண்ணன் ராமலிங்கமும், அவர் மனைவி மக்களும், குழந்தை குட்டிகளோடு வந்தார்கள். பத்து வயது பத்மா, எட்டு வயது கனகராஜ், ஐந்து வயது செல்வி ஆகிய பிள்ளைகள், "அத்த... அத்த...” என்று சொல்லிக்கொண்டு, அவளின் கைகளையும், அந்த கை வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையில் உள்ள தின்பண்டங்களையும் பற்றியபோது, தனக்குப் பிள்ளை பெறும் தகுதி போய்விடவில்லை என்பதுபோல், ஒரு பிள்ளை இடுப்பில் இருந்துகொண்டே எட்டிப் பார்க்க, இன்னொரு பிள்ளை வயிற்றுக்குள் இருந்துகொண்டே கீச்சு கீச்சு காட்ட அண்ண்ரிக்காரி கனகம், "ஏமுல... இப்படிப் பறக்கிய? தின்பண்டத்த பார்த்ததும் இப்படிப் பறக்கணுமா? இங்க இல்லாத மாம்பழமா? இங்க இல்லாத பலாப்பழமா?" என்று அடுக்கிக்கொண்டே போனபோது, அங்கே இருந்த எல்லோருக்கும் என்னவோ போலிருந்தது. கனகத்திற்கு வாழ்க்கைப்பட்ட ராமலிங்கம், பேச்சை மாற்றினார். "மாப்பிள்ள செளக்கியமாம்மா? அவரயும் ஒரு நட வரச் சொல்லப்படாதா? இது யாரு? ஒன் நாத்துனாருதான?” என்று பேச்சைத் துவங்கியபோது "நண்டு மாதுரி இருந்தவா, விலாங்கு மாதுரி வளந்துட்டா பாரேன்... என்று கனகம், பாமாவைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிரித்தாள். பிறகு மணிமேகலையின் அருகே போய் நின்று "நாங்க