பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198 ★ இல்லம்தோறும் இதயங்கள்


மணி வெறும் சாதா மணியில்லய்யா, இது வைரமணி! ஒன் ஜம்பம் சாயாது. பந்தயத்துக்கு வாரியாய்யா? நீ இவளை நெருங்கிப் பாரு, இவள் கையாலயே நீ செருப்படிபடாட்டால், நான் உனக்கு என் உடம்பை செருப்பா தைத்து போடுறேன். அவள் புதுசா பிறந்திருக்கிற கண்ணகி. அவள் நொந்து பார்த்தாலே போதும், நீ வெந்து போயிடுவே! பந்தயத்துக்கு வாரீயா?”

மணிமேகலை பெருமையாகவும், வெறுமையாகவும் நெஞ்சை நிமிர்த்தி தலையைத் தாழ்த்தினாள். இதனால் இந்த காமாட்சி மீண்டும் சந்தேகப்படமாட்டாள் என்று அர்த்தமல்ல. அவள் இவளை நன்றாகப் புரிந்துவிட்டாள். சின்ன வயதில் அம்மாவை இழந்தவள். பிறகு சித்திக்காரியின் கொடுமையால் குறுகிப் போனவள். அவளுக்குப் பயந்து சென்னைக்கு ஓடிவந்து மாமா வீட்டுக்கு வந்தவள். அங்கே மாமா பிள்ளைகளின் ‘நேரப் போக்குக்கு’ கோமாளியாகவும் கோபங்களுக்கு குறியாகவும் போனவள். அழுது அழுது ஆத்திரப்பட்டு பட்டு, இப்போது அந்த ஆத்திரமும், அழுகையும் இல்லாமல் வாழ முடியாமலும், அவற்றிலிருந்து மீள முடியாமலும் போனவள். கண் நிறைந்த இரண்டு பிள்ளைகளையும் சீமைப் பண்ணி என்றாலும், சிரித்து மழுப்பும் கணவனையும் வைத்துக் கொண்டே “எனக்கு யாருமே இல்லியே, யாருமே இல்லியே காமாட்சி” என்று தன் தலையில் அடித்துக் கொள்பவள். இளமையில் ஏற்பட்ட நிர்கதியான உணர்வு அப்போது முடங்கிக் கிடந்து இப்போது முழு உருவம் பெற்றிருக்கிறது இந்த பரிதாபத்துக்குரியவள் பேசுவதைப் பாராட்டலாகாது.

மணிமேகலை காமாட்சியைக் கந்தசாமி கோவிலுக்கு அடிக்கடி கூட்டிக்கொண்டு போனாள். ஒரு சமயம் அவள் சந்நிதி முன்னே நின்று “முருகா! எனக்கு யாருமில்லன்னு