பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212 இல்லம்தோறும் இதயங்கள்


 ரத்தினம் போய்விட்டான். அவனையே பார்த்து நின்ற மணிமேகலை, பிறகு அவனுடன் போய், பஸ் வருவது வரைக்கும் அருகிலேயே நின்று வழியனுப்பி வைத்தாள். பஸ் போன பிறகுதான், அண்ணன் தம்பிகளைப் பற்றி கேட்காமல் போய்விட்டதை உணர்ந்தாள். திடீரென்று தன் பெயரை அழைக்கும் சத்தங்கேட்டு, நடந்தாள். நாளைக்கு அந்த மூதாட்டி தன் தமக்கையைப் பார்ப்பதற்காக சொந்த நாட்டுக்குப் போகிறார். ஒரு மாதத்தில் வந்துவிடுவார் என்றாலும் அவளுக்கு என்னமோ போலிருந்தது. அதுவும் அப்பாவின் இந்த மரணச் செய்தியைக் கேட்டசூழ்நிலையில்.

1

வள் உள்ளுணர்வு உணர்த்தியது போலவே ஒன்றின் முடிவு இன்னொன்றின் துவக்கமாகி விட்டது. கணவனிடம் இருந்து பிறந்தகம் செல்லும் மனைவி பிரியாவிடை பெறுவதுபோல, அந்த இல்லத்தில் இருந்து கண்ணிர், கழுத்து மாலையாகும்படி விடைபெற்றுச் சென்ற அந்த மூதாட்டி பிறந்த நாட்டில் தமக்கையைப் பார்த்துவிட்டு வருவதற்காகப் போனவள் அக்காள் இறக்குமுன்பே இறந்துவிட்டாள். முதுமையின் கோளாறா? முடியாத பணிக்கு வாரிசு கிடைத்துவிட்ட திருப்தியில் ஒயாது உழைத்த ரத்த நாளங்கள் ஒய்வெடுக்க நினைத்ததோ ? தெரியவில்லை!

அந்த விடுதியும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களும், தத்தம் வீடுகளிலேயே ஏதோ ஒன்று நடந்துவிட்ட திகைப்பில் சோகத்தில் ஆழ்ந்து போயின. "கலங்காதிங்க! இதுதான் அந்த நாட்டுக்கு நான் போகிற கடைசித் தடவை!" என்று சொல்லிவிட்டுப் போனவள் முதல்