பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 ★ இல்லம்தோறும் இதயங்கள்


 மாத்திரைகள் குறைந்துகொண்டு வந்தன. கம்பவுண்டராக வந்து, இப்போது எத்தனையோ எம்.பி.பி.எஸ்களை உள்ளடக்கிய மருத்துவருக்கு மாதச் சம்பளம் கொடுக்க முடியவில்லை. பிள்ளை குட்டிக்காரரான அவர் வாய் திறந்து கேட்கவில்லையானாலும், அவரது காய்ந்த வயிறு கதையைச் சொன்னது. மணிமேகலை கையில் இருந்த தங்கக் காப்பை விற்றாள். சேமித்து வைத்திருந்த ரூபாயைச் செலவிட்டாள். இருநூறு ஜீவன்களுக்கும் எப்படிப் போதும்?

ஒருநாள் மத்தியானம் எல்லோருமே அரைபட்டினி, தூக்கம் வரமுடியாத அளவிற்கு வயிற்றை வலிக்கும் பசி, இரவில் தண்ணிரைத் தவிர எதுவும் இல்லை. மணிமேகலை அலுவலக அறையில், சுவரை அலங்கரித்த ஸ்விட்சர்-முத்துலட்சுமி ரெட்டி-அந்த மூதாட்டி ஆகிய அந்த சேவையின் திரிமூர்த்திகளை கண்கலங்கப் பார்த்தாள். அவள் ஏதாவது ஒரு வழிகாட்டுவாள் என்பது போலவும் அதற்கு அந்த திரிமூர்த்திகள் வழி சொல் வார்கள் என்பது போலவும் இரண்டு பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

செய்வதறியாது, கழுத்தைத் தடவிய மணிமேகலை, தன் ஏழு பவுன் தங்கத் தாலியைப் பிடித்தாள். சந்தோஷம் தாங்காமல் தரையை மிதித்தாள். இதை விற்று இன்னும் ஒரு மாதத்தை எப்படியும் ஒட்டிவிடலாம். கூடவே இன்னொரு யோசனை.

இந்தத் தாலியைக் கட்டியவனே தனக்கு இல்லாமல் போனபோது ஏழு பவுன் தாலிக்காக அவனிடம் விட்டு வைத்திருந்த அறுபது பவுன் நகை ஏன் இருக்க வேண்டும்? அதோடு அவனிடம் ஜீவனாம்சம் ஏன் கேட்கக்கூடாது? சகோதரர்கள் அனுபவிக்கும் நிலத்தை ஏன் பிரிக்கக் கூடாது? எதற்காக, விட்டுப்போன உறவை ஒரேயடியாக