பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 ★ இல்லம்தோறும் இதயங்கள்




காணவில்லை. வசந்தி வாயும் வயிறுமாக இருந்தாள். சங்கரன் மனைவியையும், பிள்ளைகளையும் காணவில்லை.

படியேறிய மணிமேகலை மாமனார் காலைத் தொட்டுக் கும்பிட்டாள். அந்தக் கிழவர், அவளை அடையாளம் கண்டுகொண்டவர் போல் தள்ளாடி எழுந்து, அவளை அனைத்துக் கொண்டார். பையனை எங்கே மாமா? என்று அவள் கேட்கவில்லை. எங்கே அவர் அவன் இங்கே இல்லையென்று பதிலளித்து விடுவாரோ என்று பயந்தாள். அந்தப் பதில் உண்மையாகவே இருந்தாலும், அவளால்-அவள் உயிரால்-தாங்கிக்கொள்ள முடியாது.

இதற்குள் வீட்டில் இருந்தவர்கள் எல்லோருமே அங்கே வியப்போடும் பயத்தோடும் வந்துவிட்டார்கள். ரத்தினம் கோஷ்டி அவர்கள் சொல்லும் முன்னாலேயே நாற்காலிகளை அலங்கரித்தார்கள். மணிமேகலை மாமனாரைப் பார்த்தாள். அவர் முன்னால் வந்த விஷயத்தைப் பேசத் தயங்கினாள். தாட்சண்யம் என்று ஒன்று இருக்கிறதே. இது தாட்சண்யம் பார்க்கிற சமயம் இல்லை; தாட்சண்யம் பார்க்கவும் கூடாது. தாட்சண்யம் பார்த்துப் பார்த்து குட்டிச்சுவரான நாடுகள் சில வீடுகள் பல. இதனால்தான் நரகத்திற்கான வழியும் சில சமயம் நல்லெண்ணங்களால் அமைக்கப்படுகிறது என்று ஒரு அறிஞர் சொன்னார். அர்ச்சுனன் தாட்சண்யம் பார்த்தால் பாகம் கிடைத்திருக்காது. தர்மன் தாட்சண்யம் பார்த்த போது ஒரு குடிசைகூட கொடுக்கப்படவில்லை. உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டும்; யாரும் தரமாட்டார்கள்.

மணிமேகலை எல்லோரையும் பொதுப்படையாகப் பார்த்துவிட்டு ஜெயராஜை குறிப்பாகப் பார்த்தாள். அவன் அசந்துவிட்டது, அவன் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது போல் தோன்றியது. இவள் புதிய மணிமேகலை. அந்த