பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22 + இல்லம்தோறும் இதயங்கள்


கிடக்கிற கஞ்சையோ... கூழயோ குடிச்சிக்கிட்டு சும்மா கிடயும். எங்க ஊட்டுக்காரர் ஒமக்கு ஆறுமுவ நேரியில கூத்துக்கு ஏற்பாடு பண்ணுறதா சொல்லியிருக்காரு” எனறாள்.

  கூட்டம் கலைந்தது. 
  இரவுச் சாப்பாட்டை, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து முடித்தார்கள். பாமாவுக்கு பெயர முடியாத அளவுக்கு அந்த வீடு பிடித்துவிட்டது. காஞ்சீபுரத்து ஏகாம்பரேஸ்வரர் கோவிலையும், வரதராஜ பெருமாள் கோவிலையும் பார்த்து "இப்படிப்பட்ட கோவில்களை இப்போது எந்த மாடர்ன் ஆர்க்கிடெக்டாலும் கட்டமுடியுமா?" என்று வியப்படைகிற அவள், அந்த வீட்டைப் பார்த்ததும் வெளியே சாதாரணமாகவும், உள்ளே கடைந்தெடுத்த தேக்குத் தூண்களையும், அவற்றின் சிற்ப வேலைப்பாடுகளையும், மேலே முத்துப்பல்லக்குபோல், இரண்டு கட்டிடங்கள், சன்னமான கம்பி வலைகளால் இணைந்திருக்க, போதுமான அளவு சூரிய வெளிச்சம் படும்படி கட்டப்பட்டிருந்த அந்த வீட்டை, மாடர்ன் ஆர்க்கிடெக்ட் என்று சொல்லும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
  மணிமேகலை, ஒவ்வொன்றாக எடுத்து, ஒவ்வொருவரிடமும் நீட்டினாள்.
  அண்ணனுக்கு எட்டு முழ வேட்டி, பாப்ளேன் சட்டை. தம்பிக்கு டெர்லின் துணிகள், அண்ணிக்கு ஒரு உல்லி உல்லி. குழந்தைகளுக்கு 'பிராக்குகள்’. பிறகு சூட்கேஸைத் திறந்து ஒரு சின்ன மிக்ஸி யந்திரத்தை எடுத்தபோது அண்ணிக்காரி கனகம் கன்னத்தில் கை வைத்தாள். "அண்ணி! அப்பாவுக்கு தினமும் இதுல ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொடுங்க..." என்றபோது, கனகத்தின் முகம் கறுத்தது. அதைப் புரிந்துகொண்டவள்