பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம் + 31


தக்காளிப் பழ நிறம். கரும்புத் தோகை போல் அடர்த்தியான பின்னல். முன்பல்லில் ஒன்று பெரிது என்றாலும், தெத்து அல்ல. எத்தில்லாத முகம். கொஞ்சம் வளர்ந்திருக்கலாம்... நம்ம உயரத்துக்கு இது போதும்.

திடீரென்று அவன் "ஒங்க கன்னத்துல ஒரு மச்சம் இருக்கு போலுக்கு... இப்பத்தான் பாக்கேன்" என்றபோது, அவளும் அவனை இப்பத்தான் பார்ப்பது போல் பார்த்தாள்.

சிறிது தயக்கத்திற்குப் பிறகு, அவன் அவள் மோதிரக் கையைப் பார்த்துக்கொண்டே முன்னே குவிந்து பின்னால் வளைந்திருந்த மோதிரத்தைக் காட்டி "இந்த மோதிரத்துக்கு என்ன பேரு” என்றான்.

"வங்கி மோதிரம்."

“எனக்குத் தரப்படாதா?”

“சீ... லேடீஸ் தான் போடலாம். ஜென்ட்ஸ் போடக்கூடாது!"

"கையை நீட்டுங்க பார்க்கலாம். நான் இப்படிப்பட்ட மோதிரத்தை இப்பத்தான் பார்க்கிறேன்."

அவளும் 'இப்பதான்' கையை நீட்டினாள். அவன் மோதிரக் கரத்தை லேசாகப் பற்றிக்கொண்டே விரலை அழுத்தினான். விரல் கொண்ட உள்ளங்கையை அழுத்தினான். பாமாவின் பயம் படபடப்பான பேச்சாக மாறியது.

"எனக்கு இந்த ஊர்ல எல்லாமே பிடிச்சிருக்கு. பாரதியார் பாட்ல வருமே காணி நிலம். அந்தப் பாட்டு ஞாபகந்தான் எனக்கு வருது.”

"ஒனக்குத்தான் பட்டிக்காடுன்னா பிடிக்காதே?"

"நோ, நோ... ஐ அம் எ இடியட். பட்டிக்காட்டைப் பற்றி, நான்தான் கதை கட்டுரைங்கள படிச்சதால தப்பா