பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 ★ இல்லம்தோறும் இதயங்கள்


அவள் பேசியதைக் கேட்டதும், அவனுக்கு புதுத் தெம்பு வந்ததுபோல் தோன்றியது. அவள் சொன்ன கருத்துக்கள் புதிதல்ல. அவன் படித்தவை; சிந்தித்தவை. ஆனால் அப்படிப் படிக்கும்போதும் சிந்திக்கும்போதும் ஏற்படாத தெம்பு, இப்போது ஏற்பட்டது. ஒருவேளை, சொல்கிறவர் சொன்னால்தான் புரியுமோ?

மணிமேகலை இயல்பாகக் கேட்டாள்:

“மெட்ராஸ்ல வேலையில இருந்திங்களாமே, ஏன் அத விட்டுட்டிங்க?”

"இப்போ அலுவலகங்களுல ஒவ்வொரு அறையும் ஒரு பொலிடிக்கல் ஹாட்–பெட்டா மாறிட்டு. பாலிடிக்ஸ் இல்லாத ஆபீஸே இல்ல. நாலு சுவருக்குள்ள இருந்து கிட்டே வெளி உலகம் தங்களுக்குள்ளேயே இருக்கதா நினைக்கவங்க. நாலு சுவருக்குள்ள அடிமையாய் வாழ்ந்து, வெளியுலகத்துக்கு போயிடலாமான்னு நினைச்சும் பிள்ளை குட்டிகளுக்காக அவமானத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் முன்னாள் சுயமரியாதைக்காரங்க, ஆபீஸ்ல ‘பேச்சு’ வாங்குனாலும் வெளில ‘நிமிர்ந்து’ நிற்கும் போலிகள். இப்படி குட்டிச் சுவராய் போச்சு. ஒருவனுக்கு உலை வைக்கிறவன், அவனுடன் கேன்டீன்ல டிபன் சாப்புடுறவனாய்தான் இருப்பான். ஒருவன் மேல பெட்டிஷன் போட்டுட்டு, அப்புறம் அவனையே கட்டிப் பிடித்துத் தழுவும் நண்பங்க. இப்படி ஆயிட்டு! பறவைகள் சுதந்திரமாய் இருக்கதாய் நினைக்கோம், ஒரு காக்காவையாவது சிட்டுக்குரு வியையாவது பாரு. உட்காரும்போது நாய் இருக்கா பூனை இருக்கான்னு பார்த்துக்கிட்டேதான் உட்காருது. இது மாதிரிதான் படிச்சவங்க நிலமை, படிக்காதவங்க, அவங்கள சுதந்திரமாய் வாழ்றதாய் நினைக்காங்க. ஆனால் அது காக்காவோட சுதந்திரம். அந்த காகத்துக்கு தப்பிக்கத்-