பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 ★ இல்லம்தோறும் இதயங்கள்


பொங்கிய ஆத்திரத்தை அடக்கும் பொருட்டு, மாந்தோப்புப் பக்கமாகப் போனார்.

மணிமேகலை, ‘தூங்கிக்’ கொண்டிருந்த அண்ணியின் அருகே, குத்துக்காலிட்டு உட்கார்ந்து “நான் போயிட்டு வாரேன் அண்ணி.” என்றாள். கனகம், ‘உம்’ என்றாள். சிறிதுநேரம் அப்படியே மணிமேகலை உட்கார்ந்தாள். அந்தப் பக்கம் வந்த அண்ணனுக்கே மனசு கேட்கவில்லை. “போயிட்டு வாரேன்னு சொல்றாள். எழுந்திருச்சி வழி அனுப்பேமிழா. அறிவு கெட்ட தடி மாடு” என்று அவன் சொன்னபோது, கனகம், கிட்டத்தட்ட தடிமாடு மாதிரியே எழுந்தாள்.

பாமா, சந்திரன், மணிமேகலை பின்னால் உட்கார்ந்து கொண்டார்கள். அங்கே தற்செயலாக வந்த ‘கூத்து’ கோவிந்தன், ரயில் நிலையத்தில் ஒத்தாசை செய்வதற்காக, முன்னால் உட்கார்ந்தான்.

டாக்ஸி புறப்பட்டது.

மணிமேகலை, அப்பாவைத் தேடினாள். அவர் அங்கே இல்லை. ஏதோ ஒரு மாமரத்தின் முனையில், பூமியைத் துளைப்பவர் போலவும், ஆகாயத்தைத் துழாவுகிறவர் போலவும், குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டிருந்தார். மணிமேகலை, அப்பாவைக் கூப்பிடவில்லை.

வழிநெடுக தெரிந்தவர்களிடமெல்லாம் ‘போயிட்டு வாரேன்’ என்று அவள் கும்பிட, சீக்கிரமா வரணும் என்று அவர்கள் பதிலுக்குக் கைகூப்புவதுமாக, டாக்ஸி, திருச்செந்தூர் சாலைக்கு வந்தது.

“அடுத்த பிரசவத்த இங்க வச்சிக்க” என்றாள் தங்கம்மா பாட்டி.

சந்திரன், அக்காவைப் பார்த்து “டிராக்டர்ல போகச் சொல்றான். இவன் பெண்டாட்டி, பக்கத்து ஊர்ல