பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு. சமுத்திரம் ★ 45


இருக்கிற அப்பன் வீட்டுக்குப் போறதுக்கு மட்டும், தூத்துக்குடில இருந்து டாக்ஸி வரணுமாம். எனக்கு வந்த கோபத்துக்கு...” என்றான்.

பாமா சீண்டினாள்.

“ஓங்க கோபம் எனக்குத் தெரியாதா? பாரு அண்ணி, கனகக்கா என்னைப் பற்றிப் பேசும்போது, இவரை தள்ளாத குறையா அனுப்பி, பதிலுக்கு ஏதாவது பேசுங் கன்னு சொன்னேன். ஆசாமி, பிள்ளையார் மாதிரி இருந்துட்டு, இப்போ சின்ன விஷயத்துக்கு குதிக்காரு.”

“அண்ணன்மேல கோபப்படாதடா. அவன், டிராக்டர்ல போகச் சொன்னதுல எனக்குக் கோபம் வரல. நம்ம ரத்தினம் அண்ணன்கிட்ட போனா நிறைய விஷயம் புரியுது. டிராக்டர்லயா போறதுன்னு கோபப்படுறது, பாலுக்கு சர்க்கரை இல்லையேன்னு கஞ்சிக்கு உப்பில்லா தவங்கிட்ட சொல்றது மாதிரி. அதோட, அண்ணன் எனக்காக அண்ணிய திட்டுனதையும் பார்க்காண்டாமா ? பாமா, எங்க அண்ணி பேசுறதை தப்பா நினைச்சுக் காதம்மா.”

“நான் ஏன் நினைக்கேன்? இந்த வீட்டுக்கு நிரந்தரமாய் வந்த பிறகு, அவங்க பேசுறதுக்கு இப்போ ஒத்திகை பார்க்காங்க, கனகக்காவை, ஒரு கேரக்டரா நினைச்சி ரசிச்சேன்...”

“இந்த வீட்டுக்கு நிரந்தரமாய்...” என்று சொன்னபோது, முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்த கோவிந்தன், சுவாரஸ்யமாகத் தலையைத் திருப்பினான். இதைப் பார்த்த மணிமேகலை “பார்த்துப் பேசும்மா. நம்ம கோவிந்தன் ஊர்ல, பவளக்கொடிக்குப் பதிலா, பாமாக் கொடின்னு ஒரு கூத்தே போட்டுடுவான்” என்றாள்.

உடனே கோவிந்தனும் “இந்த சமாச்சாரம் எனக்குப் புது சில்லம்மா. என்னைக்கி அர்ச்சுன ராசதுரை