பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 ★ இல்லம்தோறும் இதயங்கள்


அங்கே போட்டிருந்த லோபா ஸெட்டில் அவள் மாமனார் சபாபதியும், அவள் பெரிய மைத்துனன் சங்கரனும், அவனது மாமனார் ராமபத்திரனும், டென்ஷனோடு உட்கார்ந்திருந்தார்கள். எதிரே இருந்த ஒரு துண்டு ஸோபாவில் ‘துக்க’ (கறுப்பு) கோட் போட்ட வக்கீல் ஒருவர் சிரித்தபடி உட்கார்ந்திருந்தார்.

அவர்களிடம் பேசப்போன மணிமேகலை, மாமியார் வந்து உள்ளே வரும்படி சைகை செய்தார். மைத்தனர் மனைவி லட்சுமி வந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவள் பிள்ளைகள் ரமாவும் சேகரும் ஓடி வந்து ‘சித்தி சித்தி’ என்று சொல்லிக்கொண்டே காலைக் கட்டிக் கொண்டன. சின்ன மைத்துணியும் பியூஸிக்காரியுமான சீதா, அண்ணியின் வலது தோளைப் பிடித்தாள். அவளுக்கு இளையவனான ‘ஹையர் செகண்டரி’ பாஸ்கர் குழைந்துகொண்டே வந்து நின்றான். கடைக்குட்டியான இந்திரா, அண்ணியின் உடம்பில் பிடிக்க இடந்தேடி கிடைக்காமல் அவள் கொண்டு வந்த பிளாஸ்டிக் கூடையில் இருந்த ஒரு மாம்பழத்தைப் பிடித்தாள். கொண்டு வந்த பொருட்களை, அண்ணனுடன் சேர்ந்து இறக்கி வைத்துவிட்டு அங்கே வந்த பாமா, தன்னை யாரும் கவனிக்காமல் இருப்பதைக் கணக்கிட்டுக் கொண்டே “அய்யோ என்னையும் கொஞ்சம் கவனியுங்க. நானுந்தான் பத்து நாள் பிரிஞ்சிருக்கேன்” என்றாள்.

மாமியார், மணிமேகலையின் இரண்டு கைகளையும் தன் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு “நல்ல சமயத்துல வந்துட்டம்மா. இங்க பட்டப் பகலுல அணியாயம் நடக்கு. நாங்க அதப் பாத்துட்டு பட்டமரமா நிக்கோம். எந்த வீட்லயும் இந்த அணியாயம் கிடையாது” என்றாள்.

உடனே மூத்த மைத்துனர் மனைவி லட்சுமி, “ஆமா நாங்கதான் அநியாயக்காரங்கன்னு தெரியுதே அநியாயக்-