பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு. சமுத்திரம் ★ 57


நிலைமையில இருக்கிங்க. எங்க பேக்டரியில, இரண்டு லேத் மிஷின்ல குத்துவிளக்கு தயாரிச்சும், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிச்சும் நல்லபடியா வாழறோம். இன்னொரு லேத் மிஷின் வரப்போவுது. இந்த சமயத்துல, ஆளுக்கொரு லேத் மிஷினை எடுத்துக்கிட்டால் பேக்டரி என்னாவும்? ஆர்டர் கொடுத்தவங்க என்ன நினைப்பாங்க? பேக்டரி என்ன அரவ மிஷினா நினைச்ச இடத்துக்கு மாத்துறதுக்கு?”

“என் தொழில மட்டமா பேசுனா, எனக்குப் பொல்லாத கோபம் வரும்.”

“கோபமே பொல்லாதது. இதுல வேற பொல்லாத கோபமுன்னு ஒண்னு இருக்கா ? பெரியப்பா, ஒங்க மகளுக்கு யாரும் எந்த குறையும் வைக்கல. எங்களுக்கு மாமாவுக்குப் பதிலா தகப்பனார் இருக்காங்க. அக்கா சந்தோஷமாத்தான் இருக்காங்க. அவங்க ரமாவையும், சேகரையும் பெத்துத்தான் போட்டாங்க வளத்ததுல்லாம் எங்க மாமியார்.”

“ஓஹோ என் மவளுக்கு பெத்த பிள்ளியள வளக் கதுக்கு துப்பில்லன்னு சொல்றியோ?”

“இப்படி சகுனி மாதிரி பேசுனா, எந்த வீடும் உருப்படாது...”

“என்னை சகுனின்னு பேசினால் எனக்குக் கெட்ட கோபம் வரும். டேய் ஜெயராஜ்! ஒன் பொண்டாட்டிய வார்த்தய அளந்து பேசச் சொல்லுடா.”

மணிமேகலை தொடர்ந்தாள்:

‘சகுனி எவ்வளவோ மேலு பெரியப்பா. அவன் கெளரவர்களுக்கு மட்டுந்தான் தாய்மாமன். பஞ்சபாண்டவங்க சம்பந்தம் இல்லாதவங்க. அதனால் அவன் செய்ததக்கூட மன்னிச்சிடலாம். ஆனால் ஒங்களுக்கு, இந்த