பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 ★ இல்லம்தோறும் இதயங்கள்


எஞ்ஜினியர்களும், இந்த சின்னஞ் சிறிசுகளும் சொந்தமான அக்கா மக்கள். அப்படி இருந்தும் குடும்பத்தைக் கலைக்கப் பார்க்கிறிங்க. சகுனி அப்படிப் பண்ணமாட்டான்.”

“மணிமேகல... எனக்கு ஒய்யாவ விட மூணு வயசு அதிகம். வயசுக்காவது மரியாத கொடு...”

“அதனாலதான் நிதானமா பேசுறேன். எங்க அப்பா மட்டும் இப்படி இங்க வந்து பேசியிருந்தால், நானே அவரை கழுத்தைப் பிடிச்சி வெளில தள்ளியிருப்பேன்.”

ராமபத்திரன் எழுந்தார். ஆக்ரோஷமாக எழுந்தார். “என்னையா கழுத்தப் பிடிச்சி தள்ளுவேன்னு நாக்கு மேல பல்லப் போட்டுச் சொல்லுற? எல்லாத்தையும் கோர்ட்ல பாத்துக்கலாம். ஏய் லட்சுமி! புருஷனையும், பிள்ளையளையும் கூப்பிடு... வா. போகலாம்.”

மணிமேகலையும் கோபியானாள்.

“எந்த கோர்ட் வரைக்கு வேணுமுன்னாலும் போகலாம். ஏங்க ஒங்களத்தான். குழந்தைய எடுங்க. நீங்களும் எஞ்ஜினியர்தான். நாம் எங்கேயாவது வேல தேடி பிழைச்சிக்கலாம். இந்த சின்னஞ்சிறிசுங்க, ஒங்கள மாதுரியும் ஓங்க அண்ணன் மாதுரியும் சுயமாய் சம்பாதிக்கிற அளவுக்கு வாரது வரைக்கும், ஒங்க இரண்டு பேருக்கும் சொத்துல உரிமை கிடையாது. இது உங்க அப்பாவோட சுயமான சொத்து. அவரு யாருக்கு வேணுமுன்னாலும் கொடுக்கலாம். என்னங்க உங்களத்தான். புறப்படுங்க. சின்னஞ் சிறிசுகளுக்கும், பெண் பிள்ளைகள் கல்யாணத்துக்கும் இருக்க வேண்டிய சொத்த, நாம சாப்பிடுறது மாதிரி இருக்கப்படாது. புறப்படுங்க கார் உங்களுக்கும் கிடையாது. மோட்டார் பைக், ஒங்க அண்ணனுக்கும் கிடையாது.”

ராமபத்திரன் அசந்துவிட்டார். வக்கீலைப் பார்த்தார். அவர் அங்கே இல்லை. அவர் மகளைப் பார்க்க, அவள்