பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சு. சமுத்திரம் ★ 59


புருஷனைப் பார்க்க, அவன் அம்மாவைப் பார்க்க, எல்லோரும் கைகளைப் பிசைந்தார்கள். ‘நல்ல வேள. லட்சுமி வாரேன்னு சொல்லல’ என்று மனதுள் நினைத்துக்கொண்டே, ராம பத்திரன் பத்திரமாகப் போய்விட்டார்.

மணிமேகலை, ‘முத்தாளிடம்’ வந்து அவள் திருப்பிய ‘மூஞ்சியின்’ மோவாயைப் பிடித்துக்கொண்டு, “அக்கா, சொல்லப்போனால் நான்தான் வேற்றாள். நான் பாகப்பிரிவினை கேட்டால் அர்த்தம் உண்டு. ஆனால் என் வீட்டுக்காரர், இந்த பாமா, இந்த பாஸ்கரன் இவங்கெல்லாம் உங்களோட ரத்தம். உங்களோட சொந்த அத்தை பிள்ளிங்க. நீங்க வேற்றுமை காட்டலாமா? இனிமேல், நீங்க எச்சித் தட்ட கழுவ வேண்டாம். ஒங்க தட்டையும் நானே கழுவுறேன்” என்றாள்.

“நான் ஒண்ணும் அப்படிச் சொல்லல!” என்றாள் லட்சுமி.

பெருமாள் மாடு மாதிரி எட்டிப் பார்த்த, ‘பெரியத்தான்’ சங்கரனையும் மணிமேகலை விடவில்லை.

“எல்லாரும் ஒண்ணாச் சாப்பிட்டு, ஒரே மாதுரி இருக்கிறதுலயும், ஒருவருக்கு வார கஷ்டத்த ஒன்பது பேரும் தங்களுக்கு வந்ததா நினைக்கிறதிலேயும், ஒன்பது பேருக்கு வார சந்தோஷத்த ஒருவர், தனக்கு வந்ததா நினைக்கதுலயும் இருக்கிற இன்பத்துக்கு ஈடு உண்டா? உங்களத்தான் அத்தான் ! இதையும் கேளுங்க, அப்புறமா போகலாம். நம்ம பேக்டரியில தொழிலாளிங்க விழாகிழா நடக்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போதும், தேசிய கீதம் பாடும்போதும், நம்மோட சேர்ந்து புல்லரித்து நிற்காங்களே, ஏன்? அந்தப் பாட்டுக்களோட ராகமா காரணம்? இல்ல. நாம எல்லாம் ஒரு தாய் மக்கள் என்கிற எண்ணம் அப்போ வாரதுதான் காரணம். புரியுதா ?