பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 ★ இல்லம்தோறும் இதயங்கள்


நல்லதோ கெட்டதோ லாபகரமான செய்தியாக இருக்கும். அவள் கேட்கு முன்னாலேயே சங்கரன் சொன்னான்:

“நாம் பெட்ரோல் பங்க் வைக்கிறதுக்கு, ஆயில் கார்ப்பரேஷன் பெர்மிஷன் கொடுத்திட்டு. இப்போதான் லட்டர் வந்துது.”

“ஆனால் பணத்ததான் எப்படி புரட்டுறதுன்னு தெரியல? ஏற்கனவே இன்னொரு லேத் மிஷின் வாங்க பாங்க்ல பணம் கட்டியிருக்கோம்” என்றான் ஜெயராஜ்.

மணிமேகலை சளைக்கவில்லை.

“அதுக்கென்ன ! என்னோட எழுபது பவுன் நகையில எவ்வளவு வேணுமுன்னாலும் எடுத்துக்குங்க. நாட்ல எப்போ தங்கத்தைவிட மிஷினுக்கு முக்கியம் கொடுக்காங் களோ அப்போதான் நாடு உருப்படும்!”

“நீ உண்மையிலயே தங்கமான பொண்ணுதான்” என்று சொல்லிச் சிரித்தான் சங்கரன். மணிமேகலை தொடர்ந்தாள்:

“இந்த நல்ல நாள்ல, இன்னொரு நல்ல சமாச்சாரத்தயும் அப்பாவுக்கு எழுதிடலாம். பாமா—சந்திரன் கல்யாணத்த ஆவணில வைக்கிறதா எழுதலாமா?”

“ஆவணில பெட்ரோல் பங்க் வேலையில பிஸியா இருப்போம். ஐப்பசில வச்சுக்கலாம்.”

“எங்கே வைக்கலாம்?”

“ஓங்க ஊர்ல வைக்கலாம். ஒங்க ஊர இந்த மாதிரி சமயத்துலதான் பார்க்க முடியும். மேளதாள சமயத்துல மட்டும்தான் அது ஊராய் தெரியும். லட்டர் எழுதிடு.”

“அத்தான்! நீங்கதான் இந்த வீட்டுக்கு மூத்த பிள்ள உங்க கைப்பட எழுதிப் போடுங்க.”