பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 77


டிருந்த போது, கடைக்குட்டியான இந்திரா, "மாமா ஒங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்" என்று சொல்லிச் சிரித்தாள்.

ஜெயராஜின் அப்பாதான், ராமபத்திரனை சமாதானப் படுத்தினார்.

"அவன் ஒம்ம பேரன்தான் வே! ஒம்ம புத்தியில கொஞ்சமாவது இருக்காதா? ஏய் சேகரு! தாத்தாவ தள்ளுனால் அடிப்பேன் படுவா இருந்தாலும் நீரு, பேசப் படாத வார்த்தய பேசப்படாதுல்லா.”

ராமபத்திரன் போய்விட்டதுபோல் தெரிந்தது. அவர் வெளியே போவது வரைக்கும் உள்ளே போக வேண்டாம் என்று நினைத்தவள் போல், முருங்கை மரத்தைப் பிடித்துக்கொண்டே நின்ற மணிமேகலை உள்ளே வந்தாள். முருங்கைக் கீரையை சமையலறையில் வைத்துவிட்டு, தனது அறைக்குள் வந்தாள். ஜெயராஜ் உடையணிந்து கொண்டிருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் சங்கடமாகப் பார்த்துக்கொண்டார்கள். அதற்குக் காரணமும் இருந்தது. வெளியே லட்சுமி தன் மைத்துனி பதின்மூன்று வயது இந்திராவை சாடிக் கொண்டிருந்தாள்.

"ஏண்டி! எங்கப்பாவ பார்த்து ஒங்களுக்கு. இதுவும் வேணும்.... இன்னமும் வேணுமுன்னு' சொல்றியே, என்னத்தடி அப்படி பெரிதா கண்டுட்டே? அவரு என்னத்தடி அப்டி பேசக்கூடாதத பேசிட்டாரு?

8

காலம் மாறிவிட்டது.

அப்படித்தான், மணிமேகலை உட்பட எல்லோருமே நினைக்கிறார்கள். ஆனால் காலம் மாறவில்லை. அன்று