பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 79


தூணில் உட்கார்ந்து, லட்சுமியின் மகன் சேகருக்கு ஒரு பனியன் பின்னிக் கொண்டிருந்தாள். தற்செயலாக வீட்டுப் பக்கம் திரும்பியவள் லட்சுமி ஒரு வட்டக் கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு முகத்தில், உதட்டின் ஒரத்தை தட விவிட்டுக் கொண்டிருந்தாள். மணிமேகலை அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

"என்னக்கா, பெரியப்பா வீட்டுக்கு போறிங்களா? வெயிலாய் இருக்கே?"

"இல்ல!"

"நீங்க கண்ணாடியைப் பார்த்தத வச்சு சொன்னேன்

"அவர இவங்க பேசுன பேச்சுக்குப் பிறகு, நான்தான் போகமுடியுமா? இல்ல. அவருதான் வரமுடியுமா? இந்த உதட்டுப் பக்கமாய் ஒனக்கு வந்தது மாதிரி ஒரு புள்ளி வந்திருக்கு. அத பாக்குறேன்.”

மணிமேகலை விக்கித்துப் போனாள். பனியனில் தப்புத் தப்பாக பின்னல்கள் விழுந்தன. என்ன செய்வதென்று புரியாமலும், எப்படிப் பேசுவதென்று தெரியாமலும் லட்சுமியையே வெறித்துப் பார்த்தபோது, லட்சுமி அந்தப் பெயருக்கு எதிர்மாறான பெயரின் முகத்தைப் போல் தன் முகத்தை வைத்துக்கொண்டு கண்ணாடியை அதில் ஏதோ கோளாறு இருப்பதுபோல் உற்றுப் பார்த்துக்கொண்டு "ஒனக்கு இருக்கது மாதிரியே தான் வந்திருக்கு. எல்லாம் எதிர்பார்த்ததுதான்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய்விட்டாள்.

மாமரத்து வேரில் உட்கார்ந்து, அதன் அடியில் தலைவைத்து அமர்ந்திருந்த மண்ணிமேகலைக்கு அந்த மரத்தின் ஒரு கிளையாகப் போய்விடக் கூடாதா என்று தோன்றியது. கிளையாக தன்னை எடுத்துக்கொள்ள மறுத்த மரத்தை தண்டிப்பவள் போல், தன் தலையை வைத்தே