பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 ★ இல்லம்தோறும் இதயங்கள்


அதில் அடித்துக்கொண்டாள். மரத்தின் வேருக்கு வேராக, அவள் போகத் துடித்தாள். அப்படித் துடிப்பவள்போல், வேருக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவெளிக்குள் பெருவிரலை விட்டுக் கிளறினாள்.

எப்படிப் பேசிவிட்டாள் ! அப்படியா பேசினாள்? அப்படியா எதிர்பார்த்ததுதானாம்! எனக்கு இருக்கது மாதிரியே இருக்காம். எனக்கு எங்கே இப்போ இருக்கு? புள்ளி போயிட்டே! டாக்டர்கட குணமாயிட்டு. ஆனால் மருந்தை நிறுத்தாண்டாமுன்னுதானே சொல்லியிருக்கார். லட்சுமி அக்காவா இப்படிப் பேசினது? லட்சுமி அக்காவா..?

பின்னிய பனியனில் வில்லங்கம் ஏற்பட்டது. ஊசி யையும், நூலையும் உள்ளே வைப்பதற்காக அவள் வந்தபோது லட்சுமி தன் மாமியாரின் காதைப் பிடித்துக் கொண்டு "ஒங்களுக்கு லேசா தெரியுது அத்த” என்று சொன்னாள். அவள் சொல்லட்டும். ஆனால் இந்த மாமியார் மருமகளான தம்பி மகளிடம் இன்னொரு காதையும் நீட்டுகிறாள். புள்ளி இருக்கோ, இல்லியோ புள்ளி போடுகிறார்கள்.

மணிமேகலையைப் பார்த்த மாமியார்க்காரி, அவள் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்து "ஏம்மா வெளில போய் உட்காருற? எனக்கு காதுல லேசா வலி. முன்னால காத வடிச்சி தடயம் போட்டிருந்தேனா. அப்புறம் இவருகூட ஊர்ல. இருந்து இங்க வந்த பிறகு காத அறுத்து கம்மல் போட்டனா... அறுத்துட்டு தச்சவன் சரியா தைக்கலியா.-- அதனால, வயசாக வயசாக லேசா வலிக்கு அதத்தான் என் தம்பி மகள்கிட்ட காட்டிக்கிட்டு இருக்கேன்" என்றாள்.

மணிமேகலை, வெளியே சிரித்து உள்ளே அழுதாள். மாமியார் தன்னை நேரடியாகக் குறை சொல்லாததில்,