பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 ★ இல்லம்தோறும் இதயங்கள்


“ஓ அதுவா? ஒன்னமாதிரி அழகான பொண்ணு பேசுனாலும், பாடுனாலும் கேட்க முடியாது. ஆளையே பார்த்துக்கிட்டு இருக்கலாம் போலத் தோணும்.”

வசந்தி தன் கவிழ்ந்த பார்வையை அவனை நோக்கி வீசியபோது பாமா, “ஏய்... மாட்டிக்கிட்டாங்க. மாட்டிக் கிட்டாங்க..” என்றாள். ஜன்னல் வழியாக தவியாய் தவித்த மணிமேகலை பாமாவையே பார்த்தாள். இந்த பாமாகூட மாறியிருப்பாள் போலுக்கே. ஆரம்பத்தில் அவளுக்கு வந்ததை தனக்கு வந்ததுபோல் கருதியவளாய் கன்னம் வீங்க அழுத அவள், இப்போது அதே கன்னங்கள் வீங்கும்படி சிரிக்கிறாள். சீச்சி! நான் ஒரு பிசாசு! பேய்! அரக்கி! பிறர் சந்தோஷப்படுறதை பொறுக்க முடியாத பொறாமைக்காரி!

வெளியே கும்மாளமான பேச்சு அவள் காதில் குத்தியது. ஜெயராஜ், வசந்தியைச் சீண்டினான்.

“சரி ஸ்ப்ஜெக்டுக்கு வருவோம். ஒப்பா ஹெல்தியாய் இருக்கதுக்கு என்ன காரணம்? சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுறாரா?”

“இல்ல தினமும் காலையில எழுந்ததும் என் முகத்துலதான் விழிக்காரு.”

“ஓஹோ ! இந்த சிட்டு முகத்துல விழிக்காரா? அப்படின்னா ஒண்ணு பண்ணேன். தினமும் நான் துங்கி எழுந்திருக்கு முன்னால என் முகத்துல விழியேன்.”

“அதத்தான் ஒங்க அப்பா கெடுத்துட்டாரே” என்று கிழவிக்காரி பெருமூச்சு விட்டாள்.

ஜெயராஜூக்கு திருமணம் ஆகும்போது, வசந்தி ‘பெரியவளாக’வில்லை. ராமபத்திரன் தன் மகள் பெரிய வளானவுடனேயே ஜெயராஜுக்குக் கொடுப்பதாகவும்