பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 95


“அய்யய்யோ! அப்படின்னா, இன்னும் எனக்கு நோயிருக்கா?”

“இல்லம்மா சத்தியமாய் இல்ல. இருந்தாலும் ஜாக்கிர தையா இருக்கணும் இல்லியா? இது கன்னிப் பெண்ணுக்குப் போடுற காவல் மாதிரி. இதனால அவள் கெட்டுப் போயிடுவான்னா அர்த்தம்? ஒருவர் சில்லறைக் காசுகள கொடுக்கும்போது எண்ணிப் பார்க்கிறோம். இதனால கொடுத்தவர்மேல சந்தேகப்படுறதாவா அர்த்தம்? இது மாதிரிதான், நீங்க மாத்திரை சாப்பிடறதும் உங்களுக்கு இப்போ எந்த நோயும் கிடையாது. என்னை நம்புங்க. நான் பார்மஸி கோர் ஸ்ல டிப்ளமா வாங்குனவன்.”

மணிமேகலை அவனை நம்பியவள்போல் லேசாகச் சிரித்தாள். பிறகு எதையோ சொல்ல நினைப்பவள் போலவும், சொல்லத் தயங்குபவள் போலவும் ஆள்காட்டிவிரலை உதட்டில் வைத்து அடித்தாள். மணி புரிந்து கொண்டான். பொல்லாத மணி.

“எதையோ சொல்ல வந்திங்க போலுக்கு?”

“ஆமாம். பரவாயில்ல சொல்லிடுறேன். நான் இப்போ நார்மல் லேடிதான்னு எங்க... என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லிடுவிங்களா?”

“எப்பவோ சொல்லிட்டேனே. இன்னைக்கும் சொல்றேன்!”

மணிமேகலை திடீரென்று எழுந்தாள். ராமபத்திரன் !

ராமபத்திரன் ஆவேசமாக உள்ளே வந்தார். அக்காள்காரியை ஒரு உலுக்கு உலுக்கினார்.

“என்னக்கா இதெல்லாம்? எதுக்கு சும்மா இருக்கணும். எதுக்கு சும்மா இருக்கப்படாதுன்னு ஒரு வரமுறை வேண்டாம்? லட்சுமியானதால பொறுத்துக்கிட்டாள். ஒன்-