பக்கம்:இல்லற நெறி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமண்ம் 95

டைய ஆண் குறியின் அளவிற்கும் அவருடைய கலவிபுரியும் திறனுக்கும் சிறிதும் பொருத்தம் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நடைமுறையிலும் நாம் இவ்வுண் மையை அறியலாம். சிறிய ஆண்குறியைக்கொண்டு திறமை யாகக் கலவி புரிவோர்களும் உளர்; சராசரி அளவைவிடப் பெரிதாகவுள்ள குறியினையுடையோர் அத்திறனில் குறைந் தும் காணப்படுகின்றனர்.

சாதாரணமாக ஆண்குறி விறைத்து நிற்பதில் எந்தக் கூறுகளின் செல்வாக்கு பங்குபெறுகின்றது என்பதை அறிய நீ ஆவலுடையவனாக இருப்பாய் என்று கருதுகின்றேன்: விரைகள் ஒருவித ஹார்மோனைச் சுரப்பதாக ஏற்கெனவே அறிந்திருக்கின்ருயல்லவா? இந்த நீர் நேராகக் குருதியில் கலக்கின்றது. இந்தக் குருதி மூளையை அடைந்ததும், மூளை யில் காம உணர்ச்சியை எழுப்புகின்றது; அஃதாவது அது மூளையைத் துாண்டி மீட்டறிமையங்களைக் கிளர்ந்தெழச் செய்கின்றது. இந்த இடங்களில்தான் கனவில் கண்ட கலவிச் செயல்கள், கலவி புரிய எண்ணிய நினைவுகள், கலவி புரிந்த முன்னைய அநுபவங்கன் பதிவாகியுள்ளன மூளையில் இத்த கைய காமச் சார்புடைய எண்ணங்கள் நிரம்பியதும், அங் குள்ள துடிப்பு நடு நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகிய முகுளத்தின் மூலமும், நரம்புகள் மூலமும்கடத்தப்பெறுகின் றன. முதுகு நடு நரம்பில் இதற்கெனவே "பட்ஜின்மையம்’ என்ற ஓர் இடம் உள்ளது. இஃது தூண்டப்பெற்றதும் தானுக விறைத்தல் நிகழ்கின்றது. இந்த மையத்திற்கும் ஆண்குறிக்கும் ஒர் இணைப்பு உள்ளது.

மூளையில் புணர்ச்சி அவாவினை எழுப்புவதற்கு வேறு புற நிலையான காரணங்களும் உள்ளன. இக்காரணங்கள்

53. St. LA) countuffo ár—Centres of recollections 54. SG) parl L un gir -alb-Central nervous system. 57. QpgjςTub—Medulla. 56. LL-aster ølbuih-"Budge’s centre.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/101&oldid=597816" இலிருந்து மீள்விக்கப்பட்டது