பக்கம்:இல்லற நெறி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம்

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன்: நலனே விழைகின்றேன்.

முன்னர் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்ட கருத்துகள் தெளிவாக விளங்கியிருக்கும் எனக் கருதுகின்றேன். ஆண் மகன் புணர்ச்சியின்பொழுது ஒரு தடவை வெளியாக்கும் விந்துவில் கிட்டத்தட்ட 400 அல்லது 500 மில்லியன்9ே விந்தணுக்களை வெளிப்படுத்துகின்ருன் என்று கணக்கிடப் பெற்றுள்ளது. இது மனிதருக்கு மனிதர் வேறுபடுவ துடன் புணர்ச்சிக்குப் புணர்ச்சியும் வேறுபடும், நாட்கணக் கில்-வாரக்கணக்கில்-கலவி புரியாத ஆண்மகன் முதல் தடவையாக மேற்கொள்ளும் கலவியின்பொழுது வெளியாக் கும் விந்துவில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக் கும். இவன் அடிக்கடி புணரும் பழக்கமுடையவனுக இருந் தால் ஒவ்வொரு தடவையும் வெளிப்படும் விந்துவில் இந்த எண்ணிக்கை சற்றுக் குறைந்து காணப்பெறும். ஒருவன் ஒரு நாள் இரவு இரு தடவை புணர்ந்தால் முதல் புணர்ச்சியில் வெளிப்படும் இந்த விந்தணுக்களின் எண்ணிக்கை இரண்டா வது புணர்ச்சியில் வெளிப்படும் விந்தணுக்களின் எண்ணிக் கையைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும். அடிக்கடி தொடர்ந்தாற்போல் விந்து வெளிப்படுத்தப்பெற்ருல் இந்த எண்ணிக்கைகுறைந்துகொண்டேபோகும். விந்தணுக்களின் வன்மையும் குறையும். அடிக்கடி புணர்வதால் விந்தணுக்கள் நல்ல முதிர்ச்சியையும் திறனையும் அடைய முடியாது தடுக்கப் பெறுகின்றன. என்னே இந்த இயற்கையின் போக்கு!

விந்தனுக்களின் தன்மை: விந்து வெளியேறினவுடன் அது பசை போன்றிருக்கும். ஆனால்,மூன்றிலிருந்துபதினைந்து

60. மில்லியன்-பத்து லட்சம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/105&oldid=597824" இலிருந்து மீள்விக்கப்பட்டது