பக்கம்:இல்லற நெறி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இல்லற நெறி


நிமிடங்களுக்குள் அது நீர் நிலக்கு வந்துவிடுகின்றது. புதி தாக வெளிப்படுத்தப்பெற்ற பசை போன்ற விந்துவில் இந்த விந்தனுக்கள் அசையா நிலையிலிருக்கும்; ஆனால், அது நீர் நிலைக்கு வந்தவுடன் இந்த அணுக்கள் விரைவாக அசைந்து செல்லக்கூடும். ஒரு விந்தணுவின் நீளம் 11600 அங்குலம் என்று கணக்கிடப் பெற்றுள்ளது. ஒரு சாதாரண நுண் .ெ ப ரு க் கி யி லு ம் அதனைக் காணலாம். ஒரு துளி விந்துப் பாய்மத்தில் அவை அசைவதைக் காண்பதற்கு மிக ஆர்வமாக இருக்கும். அவை அவ்வாறு அசைந்துசெல் வதைப் படத்தில் (படம்-11) காண்க. புதிதாக எடுக்கப் பெற்ற பாய்மத்தில் அவை ஒவ்வொரு துளியிலும் கூட்டங் களாக அசைவதைக் காணலாம். படத்தில் ஒர் ஒற்றை விந்தனுவும் சற்றுப் பெரிய அளவில் காட்டப் பெற்றிருப்ப தையும் உற்று நோக்குக. ஒரு விந்தணு எட்டு நிமிடங்களில் ஓர் அங்குல தூரம் அசைந்து செல்லக் கூடுமாம்.

படம்-11: உயிருள்ள விந்தனுக்களின் தோற்றம்: ஒர் ஒற்றை விந்தனு தனியாக-ப்ெரிப் அளவில்-காட்டப்பெற்றிருத்தல்;

படத்தில் காட்டப்பெற்றுள்ள விந்தணுவை உற்று நோக்கினல் அது நீள நிலையிலுள்ள தலைப்பிரட்டைபோல்கே

51. தலைப்பிரட்டிை-Tadpole.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/106&oldid=1285128" இலிருந்து மீள்விக்கப்பட்டது