பக்கம்:இல்லற நெறி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் İt) 1

காணப்படுவது தெரியவரும். அஃது ஒருமுட்டைவடிவமான தலையையும் ஒரு சிறிய நடுப் பகுதியையும் ஒரு நீண்ட மெல் விய வாலேயும் கொண்டுள்ளது. தலைப் பகுதியிலும் நடுப் பகுதியிலும்தான் முன்னர்க் குறிப்பிட்ட நிறக்கோள்களும் ஜீன்களும் அடங்கியுள்ளன. இவையே ம ர பு வழி ப் பண்புகளைத் தாங்கிக்கொண்டுள்ளன என்பதை நீ நன்கு அறிவாய். இந்த இரண்டு பகுதிகள்தாம் இனப் பெருக்கத் திலும் பங்கு பெறுகின்றன. உண்மையில் அசையும் பொறி நுட்பம் நடுப்பகுதியிலிருந்தபோதிலும், வால் பகுதிதான் இப் பக்கமும் அப்பக்கமுமாக அடித்துக்கொண்டு உயிரணு வின் இயக்கத்திற்குக் காரணமாகின்றது. சிறிது நேரத்தில் இயக்கத்தின் வேகம் குறைந்துகொண்டே சென்று கடைசி யில் நின்றே போகின்றது. விந்தணுவும் அசையா நிலையி லிருந்து மரித்து விடுகின்றது;

விந்தனுக்களின் ஆயுட்காலம்: வெளியேற்றப்பெற்ற விந்தனுக்கள் 7ಮೆ ಖ67 காலம் உயிரோடிருத்தல்கூடும் என் பதை அறிந்துகொள்ள விழைவாய் என்று கருதுகின்றேன். பெண்ணின் இனப் பெருக்க உறுப்புகளில் இவ றின் ஆயுட் காலத்தைப்பற்றிப் பின்னர் விளக்குவேன். உடலுக்கு வெளியில் அவற்றின் வாழ்வு அவை வைக்கப்பெற்றுள்ள வெப்ப நிலையைப் பொறுத்தது. சாதாரண அறையின் வெப்ப நிலையில் அவை 48 மணி நேரமும் அதற்கு மேலும் உயிர் வாழலாம். வெதுவெதுப்பான வெப்பநிலையில் அவற்றின் இயக்கம் விரைவாக்கப்பெற்று அவை ஆற்றலை இழப்பதால் அவற்றின் ஆயுளும் குறுகிவிடுகின்றது. எனி னும், அவை சீதள அலமாரியில் வைக்கப்பெற்ருல், அவை t}} நாட்கள் உயிரோடிருக்கும். குளிர்ந்தநிலை அவற்றின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்திவிடும்: மீண்டும் அவை வெப்பச் சூழ்நிலைக்கு வருங்கால் இயக்கத்தைத் தொடங்கும். திடீரென்று உறை நிலக்குக் கொண்டு வந்தால் அவற்றை மாதக் கணக்கில்-ஏன் ஆண்டுக் கணக்கில்கூட-இயங்கா நிலையில் வைத்திருத்தலும் கூடும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/107&oldid=597827" இலிருந்து மீள்விக்கப்பட்டது