பக்கம்:இல்லற நெறி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைகின்றது. இத்தகைய படைப்புத் தூண்டல் மானிட இனத்திற்குமட்டிலும் சிறப்பாக அமைந்த ஒர் அற்புதப் பண்பாகும்; இம்மன நிறைவு வாழ்க்கை இன்பத்திற்கே இன்றியமையாத தேவையுமாகும்.

திருமண உறவினை, பெற்ருேர்கள் சிறப்புறத் துய்ப்ப தல்ை பல பெரிய கடமைகள் தாமாக நிறைவேறுகின்றன. மானிட இனம் வாழையடி வாழையாக வளர்ச்சியுறுகின்றது. பெற்ருேர்கள் தம் மக்கள் வழிய்ே தம்முடைய மரபு வழிப் பண்புகளையும் வாழ்க்கையில் பெற்ற சிறப்பியல்புகளையும் வழிவழியே கடத்துகின்றனர். திருமணத்தினுல் தம்முடைய வும், தம் முன்னேருடையவும், ஒரு குறிப்பிட்ட மரபு வழி யினருடையவுமான சமூக மார்க்கண்டேயத்தை அடைய முடிகின்றது. தம் முடைய நற்பெயர், மதிப்பீடுகள், மரபு வழிப் பண்புகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைத் தம் முடைய குழந்தைகள், பேரன்மார்கள், பின் சந்ததியினர் இவர்கட் குத் தருவதனால் இவை நல்ல பாதுகாப்பாக அமைந்து விடுகின்றன. இக்காரணங்களால்தான் உலகி லுள்ள எல்லாச் சமூகத்தினரும் திருமணத்தை மானி ட இனத்தின் இருப்பிற்கே இன்றியமையாத நிகழ்ச்சியாகவும் சமூகம் அழியாதிருக்கக் கூடிய அறுதியிடும் கூருகவும் கருது கின்றனர்.

பெண் ஆண் என்னும் இருபாலாரும் உற்ற வயதடைந் ததும் இருவர் மாட்டும் ஒருவித இன்ப உணர்வு எழுகின்ற தன் ருே? இவ்வுணர்வு உயிர்களிடத்து எழுவதன் நோக்கம் என்ன? இன்பத் தோற்றத்துக்கென மெல்லுறுப்புகளும் அவைகளின் காப்புக்கென வல்லுறுப்புகளும், அவைகளின் அரனுக்கென நரம்பு. எலும்பு, தசை, தோல் முதலிய ஏனைய அமைப்புகளும் இயற்கையில் அமைந்திருக்கும் நுட்பத்தை ஒவ்வொருவரும் உன்னிப்பார்த்தல் வேண்டும்; அவற்றின் நோக்கங்களையும் உணர்தல் வேண்டும். உடற் கூற்றின் அமைப்பும், அதனுல் எழும் இன்பமும் பெண் ஆண் சேர்க்கை இயற்கையில் பொருந்தியதொன்று என்ப தைச் செவ்வனே அறிவுறுத்துகின்றன. பெண்-ஆண் சேர்க்கையின் மூலம் துன்ப இருளிற்கட்டுண்டு கிடக்கும் உயிர்கட்கு ஆண்டவன் உடலை ஈந்து இவ்வுலக வாழ்வை நல்குகின்றன் என்றும், ஆண்டவன் படைப்புக்கு இச் சேர்க்கை ஒரு வழியாக அமைந்துள்ளது என்றும் ஆன்டுேர் கூறுகின்றனர்.

3. *čips lorriféogâţGi-uitb-Social immortalitiy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/11&oldid=597833" இலிருந்து மீள்விக்கப்பட்டது