பக்கம்:இல்லற நெறி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 105

விந்தனுக்கள் தங்கிளுல் அவை தம்முடைய ஊட்டத்தை இழக்கின்றன என்று தெரிகின்றது.

ஹார்மோன்கள்: இனி, ஹார்மோன்களைப்பற்றிச் சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன். நம்முடைய உடலில் சில சுரப்பிகளில் உண்டாகிக் குருதியின் மூலம் உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகளுக்குக் கொண்டுபோகப் பெற்று அவற்றின் செயல்களில் மாற்றங்களை உண்டாக்கும் வேதியியற்பொருள்களே ஹார்மோன்கள்’ என்ற பெயரால் குறிக்கப்பெறுகின்றன: நம்முடைய உடலில் ஹார்மோன் களே உண்டாக்கும் பல சுரப்பிகள் உடலின் பல்வேறு பகுதி களில் அமைந்துள்ளன. மூளையின் அடிப்பகுதியில் அமைந் துள்ள அடித்தலைச்சுரப்பி, கழுத்துப்பகுதியில் உள்ள புரிசைச்சுரப்பி (கேடயச் சுரப்பி) , சிறுநீரகங்களின் மீது கிரீடம்போல் அமைந்துள்ள மாங்காய்ச் சுரப்பிகள்" இன கோளங்கள் (ஆண்களிடம் உள்ள விரைகள், பெண்களிடம் உள்ள சூற்பைகள்??), ஆகியவை மிகவும் முக்கியமானவை. பெரும்பாலான ஹார்மோன்கள் பாலுணர்ச்சியிலும் இனப் பெருக்கத்திலும் முக்கிய பங்கு கொள்ளுகின்றன. இந்தக் கடிதங்களில் பல இடங்களில் இவற்றின் இன்றியமையாமை யையும் செயல்களையும்பற்றிக் குறிப்பிடுவேன். நம் உடலி லுள்ள பல்வேறு உறுப்புகளையும். இழையங்களையும் தொடக்குவதிலும் தூண்டுவதிலும் இந்த ஹார்மோன்கள் பெரும்பங்கு பெறுகின்றன. ஒவ்வொரு ஹார்மோனுக்கும் நம் உடலின் பொறிநுட்பத்தில் தனிப்பட்ட பங்கு உண்டு என்று உடலியலறிஞர்கள் கூறுகின்றனர். எனினும், இந்த எல்லாச் சுரப்பிகளும் ஒன்றுக்கொன்று இன்றியமையாத

莎系。 வேதியியற் QLimó56irãeir—Chemical substances 65. Bylą #353aid #frül3–Pituitary gland 66: Lifso gáàgú13—Thyroid gland 67. Lorriñostić gorillo-Adrenal gland 68. Q«si (3.FrrawrfÉiéséir-~Gonads 69. சூற்பைகள்-0varies

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/111&oldid=597836" இலிருந்து மீள்விக்கப்பட்டது