பக்கம்:இல்லற நெறி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இல்லற நெறி


செயலையும் புரிகின்றன; ஏதாவது ஒன்று சரியாகச் செயற் படாவிடினும், ஏனையவை சரியாக இயங்காமல் பாதிக்கப் பெறும்.

பாலறிகுறிகள்: அணிடம் காமச்சுரப்பிகளில் உண்டா கும் ஹார்மோன்கள் இடைநிலைப் பாலறி சிறப்பியல்புகளை உண்டாக்குவதே அவற்றின் தனிப்பட்ட செயல் ஆகும்: இந்தச் சிறப்பியல்புகளே பெண்ணிடமிருந்து ஆணைப் பிரித் தறியத் துணைசெய்கின்றன. அமைப்பிலும் செயலிலும் ஒரு பாலிடம் காணப்பெருத ஒரு சில சிறப்பியல்புகளால்தான் இருபாலாாையும் பிரித்த ரிய முடிகின்றது. பிறப்புறுப்புகளே முதல்நிலைச்சிறப்பியல்புகளைக்காட்டுபவைகள். ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் பிறப்புறுப்புகளைக்கொண்டே அஃது ஆணு அல்லது பெண்ணு என்று சொல்லுகின்றுேம். அக் குழந்தை வளர வளா, மேலும் பிரித்தறிவதற்கு வேறு சிறப் பியல்புகளும் தலைக்காட்டுகின்றன. விரகறிபருவத்தில் 9 பையனின் முகத்தில் மீசையும் தாடியும் அரும்புகின்றன; அவனுடைய குரல்வளை பெரிதாகிக் குரலும் தடிக்கின்றது; உடலின் கட்டமைப்பும் சிறப்பாக ஆணென்று வேறுபடுத் திக் காட்டுகின்றது. சிறுமி படிப்படியாக உருண்டை வடிவத் தைப் பெறுகின்ருள்: கொங்கைகள் பருக்கின்றன; இடுப்பு விரிவடைகின்றது; அக்குளிலும் பெண்குறியிலும் உரோமங் கள் முளைக்கின்றன. இவைதாம் இடைநிலைப் பாலறிகுறி களாகும். இவை பல பிராணி இனங்களிடமும் காணப்பெறு கின்றன: சேவலுக்குக் கொண்டையும் குதிமுட்களும்' தோன்றுகின்றன; கலைமானுக்கும் செம்மறியாட்டிற்கும் கொம்புகள் முளைக்கின்றன. பல பறவையினங்களின் இறகுத் தொகுதிகள் பாலுக்கேற்றவாறு மாற்றம் அடைகின்றன? இவை யாவும் இடைநிலைப் பாலறிகுறிகளே.

70. 33,7310 ugbau-b-Puberty 71. Girdvar&r–Larynx 72. Q3 m girao L-—Comb 73. குதிமுட்கள்-Spurs

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/112&oldid=1285131" இலிருந்து மீள்விக்கப்பட்டது