பக்கம்:இல்லற நெறி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இல்லற நெறி


களில் இச்செயல் குறைந்த கட்டணத்தில் செய்யப்பெறும் என்ற விளம்பரப் பலகைகள் தொங்குமாம்! இரஷ்யாவில் ஒரு சமூகத்தினரிடம் இச்செயல் சம பச் சடங்குகளின் ஒரு பகுதியாக இருந்துவந்ததாகக் கூறப்பெறுகின்றது. பொது வாசு இணகோளங்களை இழந்த ஒரு பையனிடம் இடைநிலைப் பாலறிகுறிகள் தோன்றுவதில்லை; அவன் ஒரு அலியாகவே காணப்பெறுவான். முகத்தில் தாடியின்றி, மெல்லிய குரலுடன், கொழுத்தஉடலுடன்அவன் காணப்பெறுவான். அவனது பிறப்புறுப்புகள் வளர்ச்சியின்றி இருக்கும்; புணர்ச் சித் துடிப்புகளும் அவனிடம் முழுநிலையில் எழும்புவதில்லை. பாண்டவர்களின் ஓராண்டுக் கரந்துறைவாழ்க்கையில் அர்ச் சுனன் பேடியாக விராடன் அரண்மனையில் பணிசெய்ததை இவ்விடத்தில் நினைவு கூர்க, விரகறி பருவத்திற்குப் பின்னர் விரைகளை நீக்கினல், தோன்றிய இடைநிலைப்பாலறி குறிகள் முழுவதும் மறைவதில்லை. ஆல்ை, வளர்ச்சியில் மாற்றம், கொழுப்பு பெருகுதல், மனநிலை, உள்ளக் கிளர்ச்சி நிலையில் மாற்றங்கள் ஆகிய பல்வேறுமாற்றங்கள் தலைக்காட் டத்தான் செய்யும். நீண்ட காலத்திற்குப் புணர்ச்சிவிருப்ப மும், புணர்ச்சித்திறனும் அப்படியே இருக்கும். ஆல்ை, சிலரிடம் அவை அதிக அளவில் குறையலாம்; அல்லது, முற்றிலுமே மறைந்துவிடலாம்.

சுரப்பிகளை இடம் பெயர்த்து நடுதல்: இவ்விடத்தில் இன் ைெரு வியப்பிற்குரிய செய்தியைத் தெரிவிக்க விரும்புகின் றேன் ஒரு பிாாணியின் உடலினின்றும் ஒரு சுரப்பியை நீக்கி அதனைப் பிறிதொரு பிராணியின் உடலில் பதியவைத்தலில் அறிவியலறிஞர்கள் வென்றி கண்டுள்ளனர்; இப்பிராணிகள் ஒரே இனத்தைச் சார்ந்தவைகளாகவும் இருக்கலாம்; வெவ் வேறு இனத்தைச் சாந்தவைகளாகவும் இருக்கலாம். இத் தகைய சோதனைகள் சென்ற நூற்றுண்டின் நடுப்பகுதியில் சோதனைக்காகச் செய்யப்பெற்றன. அண்மைக்காலத்தில் இவை பெரிய அளவுகளில்மேற்கொள்ளப்பெற்றும் வருகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/114&oldid=1285132" இலிருந்து மீள்விக்கப்பட்டது