பக்கம்:இல்லற நெறி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 置香器

றன. இத்துறையில் பேராசிரியர் ஸ்டீனக்' என்பவரின் சோதனைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. வியன்ன நகரைச் சேர்ந்த இந்த அறிஞர் ஆண், பெண் பிராணிகளை விரையடித் தார் : இப்பிராணிகள் அலித்தன்மையை அடைந்தன். பிறகு இந்தப் பிராணிகளுள் ஆணிடம் பெண்ணின் சுரப்பிகளையும் பெண்ணிடம் ஆணின் சுரப்பிகளையும் பெயர்த்து வைத்த ர். இவைகளிடம் முறையே பெண்ணின் சிறப்பியல்புகளும் ஆணின் சிறப்பியல்புகளும் தோன்றின. இச்சோதனைகளை அவர் எலிகள், ஒருவகை முயல்கள். சில பறவைகள் ஆகிய வற்றிடம் செய்து வெற்றி கண்டார்:

மேற்குறிப்பிட்ட சோதனைகள் மனிதனிடம் இதுகாறும் செய்யப்பெற்றதாகத்தெரியவில்லே. பிராணிகளைப்போலவே மனிதன் இத்தகைய சோதனைகட்கு எங்ங்ணம் உட்படுவான்? ஆனல் 1914-இல் லிட்ஸ்டன்' என்ற ஓர் அமெரிக்க மருத்து வர் தற்கொலை புரிந்துகொண்ட ஒருவருடைய விரையைத் தன்னுடைய விரைப்பையில் புதைத்துவிளைவுகளைக்கவனித்த தில், அவர் தன்னுடைய உடல் நலத்தில் மேம்பாடு கண்ட தாகவும், ஆற்றலை அதிகமாக்கியதாகவும் கூறியுள்ளார். வேறு ஆய்வாளர்களும் இத்தகைய சோதனைகளை மேற் கொண்டுள்ளனர். வொரளுஃப்8 என்பார்குரங்கின் விரைகளை நட்டுச் சிறப்பான விளைவுகளை வெளியிட்டுள்ளார். ஆனல், இவ்விளைவுகள் எந்த அளவு புதியனவாக நடப்பெற்ற சுரப்பி களின் சுரப்பு நீர்களால் ஏற்பட்டவை, எந்த அளவு தனி யாளின் மனத்துண்டலால் ஏற்பட்டவை என்பது இன்னும் வாதத்திற்குரியதாகவே உள்ளது.

இயற்கையன்னையின் சோதனைகள்: இத்தகைய சோதனை களைச் சில சமயம் இயற்கையன்னையே நடத்திமகிழ்கின்ருள்! சில சமயம் ஆண் பெண்ணுகவும் பெண் ஆணுகவும் மாறிய

79: GLTIrg fuff sole.soré–Prof. Steinach 80. sôl ·sŵl-eîr-Lydston 81. Garrurgy &th-Voronoff.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/115&oldid=597843" இலிருந்து மீள்விக்கப்பட்டது