பக்கம்:இல்லற நெறி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இல்லற நெறி


'வியத்தகு செய்திகள் செய்தித்தாள்களில் வெளிவந்ததை நீ படித்திருப்பாய் என்று கருதுகின்றேன்.பெண்ணிடம்தாடி வளர்கின்றது; ஆண்குரல் தோன்றுகின்றது; கொங்கைகள் சுருங்கி மறைகின்றன; பிறப்புறுப்புகளும் மாறுகின்றன: இதற்குமாருக ஆணிடமும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இத் தகைய மாற்றங்கள் சிறுநீரகத்திற்கு மேலுள்ள சுரப்பிகள்?? அளவுக்குமீறிச் செயற்படுவதனுலும் வேறு காரணங்கள்ா லும் நிகழ்கின்றன என்று சொல்லப்பெறுகின்றன். பெண் ஆணுக மாறும் ஆளிடம் ஆண் விரைகளேப்போன்ற அமைப்பு கள் பெண்ணின் சூற்பைகளில் வளர்ந்து இருப்பதாகக் கண்டறியப்பெற்றது. அங்ங்னமே, ஆண் பெண்ணுகமாறும் ஆளிடம குற்பைகளைப் போன்ற அமைப்புக்கள் அவன்விரை களில் காணப்பெற்றன. இந்த வகையிலும் புதிய வளர்ச்சி யினை நீக்கிவிட்டால், ஆட்கள் சாதாரண நிலையினை அடை கின்றனர். பாரதத்தில் வரும் திரெளபதியின் சகோதரனன இகண்டி பெண்ணுகப் பிறந்து ஆணுக மாறிய விந்தையை ஈண்டு நினைவு கூர்க. சில முனிவர்களின் பிறப்பு விலங்கு களின் மூலம் ஏற்பட்டதாக மணிமேகலை என்ற நூலால் அறி கின்ருேம். இயற்கையின் விநோதத்தை இலக்கியங்கள் இங் ங்ணம் தெரிவிக்கின்றன;

விரைச் சாரங்கள்: காமச் சுரப்பு நீர்கள்88-ஹார் மோன்கள்-திரும்பவும் இளமையையளிக்கும் சோதனை களில்-காயகறபம் முறைகளில்-முக்கியமான பங்கினேப் .ெ ப று கி ன் ற ன. ஒரு குறிப்பிட்ட வயதெல்லைக்குப் பிறகு கருவினைச் சார்ந்த சுரப்பிகளின் செயல் குன்றிவிடு கின்றது என்பதை நாம் அறிவோம். பெண்களிடம் இந் நிலை ஐம்பது வயது நெருங்கும்போது தோன்றுகின்றது; ஆண்களிடம் இன்னும் சில ஆண்டுகட்குப்பின்னரேதோன்று

82. சிறுநீரகத்திற்கு மேலுள்ள சுரப்பிகள்--Suprarenal

glands.

83. காமச்சுரப்பு நீர்கள்--Sex hormones.

84. கருவினைச் சார்ந்த சுரப்பிகள்-eேrminal glands,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/116&oldid=1285133" இலிருந்து மீள்விக்கப்பட்டது