பக்கம்:இல்லற நெறி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

2

இல்லற நெறி' என்ற இந்நூ ல் திருமண வாழ்வில் நுழையும் நம்பி-நங்கையர் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகளனைத்தையும் ஐம்பது கடிதங்களில் விரித்தோதுகின்றது. இச்செய்திகள் மணப்பொருத்தம், அறிவியடிைப்படையில் திருமணம், இனப்பெருக்கம், குடும் பக் கட்டுப்பாடு, மக்கட்பேறு, திருமணக்கலை, பால் பொருத்தக் கேடுகள், திருமண வாழ்வில் உடல்நலம், மகிழ்வுடைய இல்வாழ்க்கை, மங்கல வாழ்த்து என்ற பத்து இயல்களில் பாங்குறப் பாகுபாடுசெய்து கூறப்பெற்றுள்ளன. ஒவ்வொரு இயலின் தொடக்கத்திலும் அவ்வியலின்திரன்ட கருத்து சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளது. இம்முறை அள் வியலைப் படிக்கப் புகுவோருக்கு ஆர்வம் எழுப்பக்கூடியதாக இருக்கும். எல்லாப் பகுதிகளையும் ஊன்றிப் பன்முறைப் படித்துச் செய்கிகளைத் தெளிவாக உளங்கொள்ளல் சாலப் பயன் தரும். நூலின் இறுதியில் பின்னிணைப்புக்களாகச் சேர்க்கப் பெற்றுள்ள பயன்பட்ட நூல்களின் பெயர்கள், பொருளடைவு ஆகியவை இந்நூலினைப் பயில்வோருக்குப் பல துறைகளிலும் ஆற்றுப்படுத்த துணையாக அமையும்,

அவற்றைப் பயனறிந்து ஏற்ற பெற்றிப் பயன்படுத்திக் கொள்வார்களாக.

கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலிய அனைத்திற்கும் நிலைக் தளன் உடல் என்பதை ஒவ்வொருவரும் நன்கு உணர்தல் வேண்டும் அறிவு விளக்கம் மனஅமைதியைப் பொறுத்து நிற்பது உடல் நலம் இனத்தை அறிவிக்கும் உறுப்பின் அகப் புற வளத்தைப் பொறுத்து நிற்பது. அவ்வுறுப்பிற்குப் புழுது நேரின் வாழ்வே குலைந்து போகும். உடலில் எவ்வுறும் பிற்கு ஊறு நேரினும் சிகிச்சை செய்துகொள்ள இயலும்; எவ்வுறுப்பினை இழப்பினும் உயிர் வாழ்தல் கூடும். ஆயின், குறிக்கு ஊறு நேரின் அதற்கு எவ்விதச் சிகிச்சையும் இல்லை; கிகிச்சை செய்து கொள்ளினும் ஊறு நீங்காது; ஊறுடன் உயிர் வாழ்தலும் இயலாது. இந்நுட்பத்தினை நன் குணர்ந்தே தமிழ் மக்கள் அவ்வுறுப்பிற்கு உயிர் நிலை: என்று பெயர் குட்டிப் போற்றினர்.

எத்தனையோ மணமக்கள் உடற்கூறு தெரியாது பல வழி களிலும் கெடுகின்றனர். ஆணுறுப்புபற்றியும் அதனோடு தொடர்புள்ள சிறு சிறு உறுப்புகள் பற்றியும் அறியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/12&oldid=597852" இலிருந்து மீள்விக்கப்பட்டது