பக்கம்:இல்லற நெறி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இல்லற நெறி


ஊட்டம் கொடுத்து வளர்க்கின்ருள் எனவே, குழந்த்ை பெற்றவில் எல்லாச் செயல்களும் பெண்ணின் உடலினுள் ளேயே நடைபெறுகின்றன என்பதை நீ அறிவாயாக. ஆகவே, அவளுடைய இனப்பெருக்க உறுப்புகளும் அவற் றின் செயல்களும் மிக விரிந்த நிலையில் உள்ளன; ஆண் உறுப்புகளை விடவும் அவற்றின் செயல்களை விடவும் பரந்து பட்டு மிகவும் சிக்கலான நிலையில் உள்ளன; உண்மை யில் அவை உயிரியலின் அடிப்படையான பொதுச் செயலில் மிகப் பெரும் பங்கினைப் பெறுகின்றன என்பதை உணர்வா

፬L}በፓõ ,

ஆணிடம் பெரும்பாலும் பாலுறுப்புகள் அவனு டைய உடலின்புறத்தே அமைந்துள்ளன என்பதை நீ அறி வாய். முதலாவதாக அவை விந்தணுக்களையும் விந்துப் பாய் மத்தையும் உண்டாக்குகின்றன என்பதும், இரண்டாவதாக அவை விந்துப் பாய்மத்தைப் பெண்ணிடம் கொண்டு செலுத்தும் வழிகளையும் உறுப்புகளையும் கொண்டுள்ளன. என்பதும் உனக்குத் தெரியும். இங்கனமே, பெண்ணிடமும் முதலாவதாகப் பாலணுக்களே (முட்டைகளே) உண்டாகும் சுரப்பிகள் உள்ளன; இரண்டாவதாக இந்த முட்டையணுக் கள் செல்லுவதற்கும் விந்தனுக்களை ஏற்பதற்கும் ஏற்ற குழல்களும் வழியமைப்புகளும் உள்ளன; இவற்றுடன் மேலும் இளஞ்சூவின் வளர்ச்சியிலும் ஊட்டத்திலும் பங்கு பெறும் உறுப்புகளும் இருக்கின்றன. இந்த அமைப்புகள் யாவும் பெண்ணுடலின் உட்புறத்திலேயே அமைந்து கிடக்கின்றன; ஆகவே, அவை உட்புறப் பாலுறுப்புகள் என வழங்கப் பெறுகின்றன. பெண்னுடவின் வெளிப்புற மாகக் காணப்பெறும் பிறப்புறுப்புகள் இனப்பருக்கத்தில் நேரான பங்கினைப் பெறுவதில்லையாதலின் அவற்றைப் பற் றிப் பின்னர்த் தெரிவிப்பேன்.

89. பாலுறுப்புகள்-se organs,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/120&oldid=1285135" இலிருந்து மீள்விக்கப்பட்டது