பக்கம்:இல்லற நெறி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இல்லற நெறி


யும் படத்தில் காண்க. இவ்வாறே ஆண் உறுப்புகள் அமைந்திருப்பதை ஈண்டு நினைவுகூர்கா ஐயம் இருப்பின் முன் னர்க் காட்டிய படத்தை நோக்கி அறிக. சிறுநீர்ப் பைக்கும் மலக்குடலுக்கும் இடையே கால்வாய் போன்ற ஒருவழி இருப்பதை நோக்குக: இதுதான் யோனிக்குழல்? , என்பது. இந்த யோனிக்குழலினுள் மேலிருந்துமுந்திரிப்பழம் போன்று ஒர் உறுப்பு நீட்டிக்கொண்டிருப்பதைக் கவனிக்க. இது தான் கருப்பை92.கருப்பையின் மேற்பாகத்திலிருந்து கொம்பு கள் போன்று இரு பக்கங்களிலும் காணப்பெறும் குழல்கள் தாம் கருக்குழல்கவாகும் . அக்குழல்களின் வெளிப்புற இறு தியில் பக்கத்திற்கொன்ருகப் பலாக்கொட்டை போன்று காணப்பெறும் உறுப்புகள்தாம் சூற்பைகள்?' என்பவை. இவை ஒவ்வொன்றையும் பற்றிச் சிறிது கூறுவேன்.

யோனிக்குழல்: இது தசையாலான மிருதுவான குழல். இது கருப்பையையும் புறத்தே காணப்பெறும் யோனி என்ற பெண் உறுப்பையும் இணைக்கின்றது. கலவியின்பொழுது இஃது ஆண் உறுப்பையும் விந்துவையும் வாங்கும் பகுதி யாகும்; மாதவிடாயின்பொழுது கருப்பையிவிகுந்து ஊறும் திரவங்களையும் வேறு திரவங்களையும் வெளியேற்றுவதும் இப்பகுதியே. புதிதாகப் பிறக்கும் குழந்தை இப்பகுதியின் மூலமே வெளிவருகின்றது. எனவே, இது பிறப்பு வழியின் ஒரு பகுதியாகின்றது. சாதாரணமாக யோனிக்குழல் சற் றேக்குறைய மூன்று அல்லது மூன்றரை அங்குல நீளமுள்ளது. இந்த அளவு ஆளுக்கு ஆள் வேறுபடுவதுடன் பெண்ணின் கலவி வாழ்க்கையையும் அவளது பிரசவ வரலாற்றையும் பொறுத்தது; மணமாகாத பெண்ணுக்கு மிக ஆழமான யோனிக்குழலும் மணமாகிப் பல ஆ ண் டு க ள | ன

91. யோனிக்குழல்-Vagina. 92: 3:(51’īgol I—Uterus or Womb. 93: 505égjpá–Fallopian tube. 943 Gös»L-Qvary.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/122&oldid=1285136" இலிருந்து மீள்விக்கப்பட்டது