பக்கம்:இல்லற நெறி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இல்லற நெறி


தோல் போர்த்திக் கொண்டிருக்கும். இது "கன்னிச் சவ்வு’91 அல்லது கன்னித்தோல் என்று வழங்கப்பெறும். இக்கன்னிக் சவ்வின் அளவும் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது. சிலரிடம் இது பிறைச்சந்திர வடிவிலும், சிலரிடம் வட்டவடிவில் சல் லடைபோல் பல துளைகளைக் கொண்டும், சிலரிடம் ஒரே ஒரு வாயினைக் கொண்டு வட்டவடிவிலும் அமைந்திருக்கும். சாதாரணமாக இஃது.ஒருமெல்லியசவ்வுபோன்றே இருக்கும். முதல் இணைவிழைச்சின்பொழுது இது கிழிந்துவிடுகின்றது: சில சமயம் ஒரு சிலரிடம் இது கிட்டத்தட்ட 213 அங்குல கனத்திலும் இருக்கும். இத்தகைய அமைப்புள்ளவர்கள் முதல் இணைவிழைச்சிற்கு முன்னரே அறுவை சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும்:

யோனிக்குழலின் சுவர் மூன்றடுக்குகளால்99 ஆனது இவற்றுள் மேற்பரப்பிலுள்ள அடுக்கு சளிச்சவ்வினல் மூடப் பெற்றுள்ளது. இந்தச் சவ்வில் சளியைச் சுரக்கும் சுரப்பிகள் இல்லை; ஆனால் இச்சவ்வு பல மடிப்புகளால் அமைந்திருப்ப தால், மேற்பரப்பு வளைந்து நெளிந்திருப்பதுபோல் காணப் பெறுகின்றது. இதல்ை ஏற்படும் முகடுகள் சொர சொரப் பான பரப்பைத் தருகின்றன. இத்தகைய பரப்பு இணை விழைச்சில் உச்சநிலை உணர்ச்சியைத் தருவதற்கும் துணை செய்கின்றது. மடிப்புகள் ు விரிவதற்கும் துணையாக உள்ளது. யோனி துளின் நடு அடுக்கு தசையின லானது; இதில் உள்ள குருதிக்குழல்கள் புணர்ச்சியின் பொழுது உப்பி யோனிக்குழலுக்கு ஒருவித விறைப்பினைத் தருகின்றது. நெருங்கியிருக்கும் குருதிக்குழல்கள், யோனிக் குழல் ஆண்குறியுடன் நன்கு பொருந்தி அதை ஒரளவு இறுகப் பற்றுவதற்குத் துணையாகவுள்ளன. இதனால் ஆண் குறியின் உணர்ச்சி தரும் நரம்பின் முடிவுகளும் யோனிக் குழலின் அத்தகைய நரம் பின் முடிவுகளும் ஒன்ருகநெருங்கி இணைவதற்கு வாய்ப்பாக அமைகின்றது. சாதாரணமாக

97: sgârguflărgiroj–Hymen. 98; 3,936—Layer.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/124&oldid=1285137" இலிருந்து மீள்விக்கப்பட்டது