பக்கம்:இல்லற நெறி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 119

யோனிக் குழவின்சுவர்கள் ஒன்ருேடொன்று ஒட்டியேஇருக் கும். குழலினுள் ஒரு பொருளை நுழைக்கும்பொழுதுதான் அவை விரிந்து கொடுக்கும். அஃதாவது, இயல்பான நிலையில் யோனிக்குழல் காற்றில்லாத பலூன்போல் இருக்கும்:

யோனிவாயின் அளவும்பெரும்பாலும்வேறுபடுகின்றது: கன்னிச்சவ்வு விரியும்முன்னர் அதன் அளவு அரை அங்குலமே உள்ளது. மணமான பெண்ணிடம் அதன் அளவு ஒன்றரை முதல் இரண்டு அங்குலம்வரையிலும் இருக்கும்; இந்த அளவு பெண்ணின் கலவி அநுபவம், குழவிப்பிறப்பின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்திருக்கும். யோனிவாயினைச்சுற்றி யுள்ள இழையங்களும் மிகவும் நீண்டு சுருங்கும் தன்மையன. அவை கிட்டத்தட்ட நான்கு அங்குலம் வரையிலும் விரியக் கூடியவை குழந்தையின் தலைவெளிவருவதற்கு இது மிகவும் துணையாகவுள்ளது. பிரசவம் முடிந்ததும் இந்த வாய் பழைய நிலையினையே அடைந்துவிடும்.

கருப்பை இவ்வுறுப்பு பட்டையான முந்திரிப்பழத்தைப் போன்ற வடிவத்தைக் கொண்டது. இது மிகவும் உறுதி யான தசைகளாலான ஒர் உறுப்பு: இது கருத்தரிப்பதற்கு முன்பு சுமார் மூன்று அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒர் அங்குல கனமும் உள்ளது. எடையில் ஏறக் குறைய ஒன்றரை அவுன்சு கொண்டது; கருப்பக்காலத்துக் கருப்பை சுமார் பன்னிரண்டு அங்குல நீளமும், ஒன்பது அங்குல அகலமும், எட்டு அங்குல கனமும் உடைய பையாக விரிந்துகொள்கின்றது. எடையும் முப்பது அவுன்சாகப் பெருகிவிடுகின்றது.

கருப்பையை உடம்பு, கழுத்து என்ற இரண்டு பகுதிக ளாகப் பிரிக்கலாம். மிகவும் அகன்ற பகுதியாகிய உடம்பு மேற்புறமும், குறுகிய பாகமாகிய கழுத்து கீழ்ப்புறமும் உள்ளன. கழுத்துப்பகுதி யோனிக்குழலினுள்நீட்டிக்கொன் டிருக்கின்றது. இப்பகுதியின் அடிப்புறத்தின் நடுவில் கருப் பையின் வெளிப்புறவாய் அமைந்துள்ளது. இது மிகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/125&oldid=597864" இலிருந்து மீள்விக்கப்பட்டது