பக்கம்:இல்லற நெறி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இல்லற நெறி


சிறிய துவாரம்: இத்துவாரத்தில் உட்புறமாக ஒன்றும், வெளிப்புறமாக ஒன்றுமாக இரண்டு வழுவழுப்பானமூடிகள் உள்ளன. கன்னிப்பெண்ணிடம் இவை நெருங்கி இணைந் திருக்கும். மாதவிடாயின்பொழுது இந்த மூடிகள் சற்றுப் பிரிந்து நிற்கும்; அப்பொழுது சற்றுப் பெரிய வட்டமான துவாரம் காணப்பெறும். பிரசவித்த பெண்ணிடம் கருப் பையின் வாயின் விளிம்பு மேடுபள்ளமான மடிப்புகளைக் கொண்டிருக்கும். உடம்புப்பகுதியில் பக்கத்திற்கொன்ருக இரு கருக்குழல்களின் வால்கள் வந்துமுடிகின்றன. கருப்பை யின் அமைப்பைப்படத்தில் காண்க (படம்-14). கருப்பையின்

韃 שהן குழல்

படம்-14: கருப்பையும் அதனுடன் தொடர்புள்ள

உள்ளுறுப்புகளும். 1; கருப்பைக்குழி; 2 கருப்பைச்சுவர்; 3. கருப்பையின் கழுத்து (செர்விக்ஸ்) 4. கருப்பையின் வாய்.

சுவர்கள் மிக நெருங்கி அமைந்துள்ளது. சுவர்களை வெளிப் புறமாக இழுத்துப் பிடிக்கும் பொழுதுதான் கருப்பையின் உள்ளே முக்கோண வடிவமான பைபோன்ற இடம் உண்டா கின்றது. கருப்பையின் உட்புறம் உள்ள பிரத்தியேகமான சவ்வில் மிக அதிகமான குருதியோட்டம் உள்ளது. இச் சவ்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/126&oldid=1285138" இலிருந்து மீள்விக்கப்பட்டது