பக்கம்:இல்லற நெறி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 罩密及

ஒவ்வொரு மாதமும் அமைப்பில் மிகச் சிக்கலான மாறுதல் களை அடைகின்றன. இதுவே மாதவிடாய் எனப்படும். இதனைப் பின்னர் விளக்குவேன்.

கருப்பை, இருபுறங்களிலும் கயிறுபோன்ற தசை நார் களால் கட்டப்பெற்று இடுப்பெலும்புக் கூட்டினுள் தலை கீழாகத் தொங்கிக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு கருப்பை இப்படியும் அப்படியும் புறண்டுகொள்ளாதபடி காக்கின்றது. சாதாரணமாகக் கருப்பை இயற்கையிலேயே சாய்ந்த நிலையில் அமைந்துள்ளது. கருப்பகாலத்தில் இப்பை எளிதாக விரிந்து மேல் நோக்கி எழும்பி வளர்கின்றது: வயிற்றின் உட்புறம் முழுவதும் போர்த்தப்பெற்றிருக்கும் வபை99 என்னும் மெல்லியதோல் கருப்பையின் மேற் பாகத்தை மூடிக் கொண்டிருக்கின்றது.

சருப்பையின் சுவர்களிலும் மூன்றடுக்குகள் உள்ளன. கருப்பையின் உற்புறத்தில் மேற்புறமாக இருப்பது சளிச் சவ்வு. இது கூழ்போன்ற ஒருவித பொருளைச் சுரக்கின்றது. இப்பொருள் கருப்பையின் புறவாயை நோக்கிப் பாய்ந்து வந்து அதை ஒரு மூடிபோல் அடைத்துக் கொள்கின்றது: சாதாரணமாக இந்த மூடியில் சதா கசிவு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். இந்தக்கசிவின் கெட்டித்தன்மை மாத விடாய் வட்டத்தையொட்டி மாறுபடுகின்றது: மாத விடாயை அடுத்து இக்கசிவு ஒட்டுத்தன்மையுடன் உள்ளது ; ஆனல், இதன் அளவு குறைந்திருக்கும். முட்டை பக்குவம் அடையும் காலத்தில் இதன் அளவு அதிகமாக இருக்கும்; இப் பொழுது இது பளிங்குபோன்று தெளிவாகவும், நீர்போன் றும், ஒட்டுந்தன்மையுடையதாகவும் இருக்கும். இந்த நிலை யில் தான் அது விந்தணுக்கள் முட்டையை நோக்கி நீந்திச் செல்வதற்கு ஏற்றதாக இருக்கிறது. மாதவிடாய் வட்டத் திறுதியில் மூடி மிகவும் தடித்து, இறுகி ஒளி புகாநிலையை அடைந்து விடுகின்றது. கருப்பையில் சளிச் சவ்விற்கு அடுத்

99. Suso Lu–Peritonium;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/127&oldid=597867" இலிருந்து மீள்விக்கப்பட்டது